பிரதான செய்திகள்

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் வர்த்தக நிலையங்களில் சோதனை!

பண்டிகைக் காலத்திலும், அதன் பின்னரும் நாடளாவிய ரீதியில் வர்த்தக நிலையங்களில் சுமார் 2500இற்கும் அதிகமான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 25ஆம் திகதி முதல் இந்த மாதம் 20ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது, வர்த்தக நிலையங்களில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டமை, விலைப்பட்டியல் காட்சிப்படுத்தப்படாமை, அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related posts

அப்பாவி மக்களை இலக்கு வைத்து பணம் உழைக்கும்! மன்னார் நகர பிரதேச செயலக நலன்புரிச்சங்கம்! பலர் கண்டனம்

wpengine

கொரோனா கட்டுப்படுத்திவிட்டது என்று யாரும் நினைக்க வேண்டாம்.

wpengine

500 கோடி அளவில் மோசடி! கணவன் தனது மனைவியால் படுகொலை

wpengine