பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

“நீர்ப்பாசன செழுமை” வேலைத்திட்டம் திறந்து வைத்த மன்னார் அரசாங்க அதிபர்.

“நீர்ப்பாசன செழுமை” வேலைத்திட்டத்தின் 5000 கிராமிய விவசாயக் குளங்கள் மற்றும் அணைக்கட்டுகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் பிரகாரம் மன்னார் மாவட்டத்தில் சுமார் 138 குளங்களை மறுசீரமைப்பு செய்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய மன்னார் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தாராபுரம் கோரைக்குளம் புனரமைப்புக்கான அங்குராப்பண நிகழ்வு இன்று(6) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஸ்டான்லி டிமேல் அவர்களின் தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் அவர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சித்திட்டத்தினை ஆரம்பித்தார்.

இத்திட்டத்திற்காக சுமார் 4.4 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ செல்வம் அடைக்கலநாதன், மன்னார் பிரதேச செயலாளர் திரு.பிரதீப், நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர், மன்னார் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், நீர்ப்பாசன பொறியியலாளர்கள், மன்னார் மாவட்ட சமூர்த்தி பணிப்பாளர், கமக்கார அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

கண்ட இடங்களில் சுடுகலங்களை பாவிப்பதற்கு உத்தரவு வழங்குமாறு நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்.

wpengine

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பதவி தொடர்பான வழக்கு மீண்டும் ஒத்தி வைப்பு

wpengine

அலரி மாளிகை முன்றலில் சொகுசு கார் விபத்து; சாரதி பொலிசாரால் கைது!

Editor