பிரதான செய்திகள்

நீர்க்கட்டண அதிகரிப்புக்கு எதிராக நாடளாவிய ரீதியில் மீண்டும் போராட்டம்!

நீர்க் கட்டண அதிகரிப்புக்கு எதிராக உடனடியாக மக்கள் அணிதிரளத் தொடங்குவார்கள் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றிலெயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார அழுத்தம் , மருந்து பொருட்கள் தொடர்பான பிரச்சினை  மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் என்பவற்றினால் மக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காக மக்களை நெருக்கடி நிலைமைக்கு தள்ளுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் மீதான இந்த அனைத்து அழுத்தங்களுக்கும் எதிராக வாழும் உரிமையை கோரி மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்க தயாராக இருப்பதாகவும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

திகன பிரச்சினை நேரம் ஞானசார தேரர், மரண வீட்டுக்குச் சென்று முடிந்தளவு பிரச்சினை

wpengine

பிரபல இயற்பியலாளர் ஸ்டீஃபன் ஹோக்கிங் மரணம்

wpengine

ரணிலுக்கு வாழ்த்து தெரிவித்து பாராளுமன்றத்தில் புகழ்பாடும் அமைச்சர் ரவூப் ஹக்கீம்

wpengine