செய்திகள்பிரதான செய்திகள்

நீராடச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி மரனம்..!

மட்டக்களப்பு, வாகரை, கருவப்பங்கேணி பகுதியில் குளத்திற்கு நீராடச்சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு வாகரை பிரதேசசெயலாளர் பிரிவுக்குட்பட்ட பனிச்சங்கேணி பகுதியிலுள்ள கருவம்பஞ்சோலை குளத்தில் இன்று (06) மாலை 3 சிறுவர்கள் நீராடிக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கி 11 வயதான 2 சிறுமிகளும் 10 வயதான ஒரு சிறுவனுமாக 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் வாகரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி.பி.எச். சில்வா தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Related posts

22 மக்கள் வங்கி சேவை மத்திய நிலையங்கள் இன்று முதல் மூடல்

wpengine

எகிப்தில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 32 பேர் பலி!

Editor

வருகிறது ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டை!

wpengine