பிரதான செய்திகள்

நீதிமன்றால் தேடப்படும் உதயங்க ஜப்பானில் வைத்து பிரதியமைச்சருடன் செல்பி

ஆயுதக் கடத்தல் தொடர்பான வழக்கில் தேடப்பட்டுவரும் பிரதான சந்தேக நபரான ரஷ்யாவுக்கான முன்னாள் ஸ்ரீலங்கா தூதுவர் உதயங்க வீரதுங்கவை ஜப்பானுக்கு சென்றுள்ள பிரதியமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை உதயங்க வீரதுங்க தனது முகப்புத்தகத்தில் பதிவேற்றியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் ரஷ்யாவுக்கான தூதுவராக நியமிக்கப்பட்ட உதயங்க வீரதுங்க, சட்டவிரோத ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார்.

இந்த வழக்கு விசாரணை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.

இதில் பிரச்சமாகும் இரகசிய பொலிஸார், உதயங்க வீரதுங்கவை கைது செய்வதற்கான திறந்த பிடிவிறாந்தை கோரிய நிலையில் அதற்கான உத்தரவையும் நீதிமன்றம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் உதயங்க வீரதுங்க இதுவரை கைது செய்யப்படவில்லை.

கடந்த முறை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தாய்லாந்துக்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் அங்கும் உதயங்க வீரதுங்க விஜயம் செய்ததுடன், மஹிந்த ராஜபக்சவுடன் நின்று இவ்வாறு புகைப்படமும் எடுத்து தனது முகநூலில் பதிவேற்றியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஜப்பானுக்கு சென்றிருக்கும் நிலையில், கிறிஸ்தவ விவகார பிரதியமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோவும் ஜப்பானில் வைத்து மஹிந்த ராஜபக்சவை சந்தித்திருக்கும் தருணத்தில் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க ஜப்பானில் வைத்து பிரதியமைச்சரை சந்தித்திருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

Related posts

அமைச்சர் ஹக்கீமுக்கு எதிராக சாய்ந்தமருது பிரதேசத்தில் கறுப்புக்கொடி

wpengine

முஸ்லிம் ஆசிரியை மீது மோதிய மோட்டார் சைக்கிள் (விடியோ)

wpengine

தீபம் TV நிலையத்தில் பெண் நிகழ்சி தொகுப்பாளரை பாலியல் ரீதியாக சில்மிஷம் செய்தி தினேஷ்  ஆதாரத்துடன் வெளியாகவுள்ள செய்திகள் .

wpengine