பிரதான செய்திகள்

நீதிமன்ற தீர்ப்பையும் மீறி இடம்பெற்றுவரும் மதில் அமைக்கும் செயற்பாடுகள்

கிளிநொச்சி – தொண்டமான் நகர் கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் சனசமூக நிலைய முன்பள்ளி என்பன அமைந்துள்ள காணிப் பகுதியில் நீதிமன்ற தீர்ப்பையும் மீறி இடம்பெற்றுவரும் மதில் அமைக்கும் செயற்பாடுகளை தடுத்து நிறுத்துமாறு கோரி கரைச்சி பிரதேச சபைக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்.மேல் நீதிமன்றத்தின் pc/27/1942/16 இலக்க தீர்ப்பின் பிரகாரம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றினால் காணிக்கான எல்லை அளவிடப்பட்டுள்ள இடத்தில் தனிநபரொருவர் மதில் அமைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார்.

எனவே அதனை தடுத்து நிறுத்துமாறு கோரி தொண்டமான் நகர் சனசமூக நிலையத்தின் நிர்வாகத்தினர் கரைச்சி பிரதேச சபைக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளனர்.

இருப்பினும் இதுவரை கரைச்சி பிரதேச சபையினரால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், இதனால் கிராமத்தின் பொதுக் காணியின் சில பகுதிகள் ஆக்கிரமிக்கப்படவுள்ளதாகவும், எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சனசமூக நிலையத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

வவுனியா பேருந்து நிலையம்! பாராளுமன்றத்தில் பேசிய சார்ள்ஸ்

wpengine

ஐ.நா.அதிகாரி காரில் பாலியல் சேட்டை வைராகும் வீடியோ

wpengine

முரண்பாடுகள் இருக்கின்ற போதும் சிறுபான்மை பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்ற களமிறங்கியுள்ளோம்

wpengine