பிரதான செய்திகள்

நீதிபதி அய்ஷா ஆப்தீன் கட்டாய விடுமுறையில் அனுப்பட்டுள்ளார்.

(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு மாவட்ட நீதிபதி அய்ஷா ஆப்தீன் கட்டாய விடுமுறையில் அனுப்பட்டுள்ளார். சம்பளத்துடன் கூடிய கட்டாய விடுமுறையில் அவர் இவ்வாறு இன்று முதல் அனுப்பட்டுள்ளதாகவும், அவருக்கு எதிராக சிறப்பு விசாரணை ஒன்றினை ஆரம்பித்துள்ளதாகவும் நீதிச்சேவை ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவித்தன.

 

பாராத லக்ஷமன் பிரேமசந்திர படுகொலை விவகாரத்தில் குர்றவாளிகளாக காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவையும் மேலும் சில சிரை கைதிகளையும் வெலிக்கடை சிரையில் சட்டத்துக்கு புறம்பான முறையில் சந்தித்ததாக அய்ஷா ஆப்தீன் மீது இணைய ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் ஊடாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் அவை குறித்து விசாரணைகளை தற்போது ஆரம்பித்துள்ள நீதிச்சேவை ஆணைக்குழு, மாவட்ட நீதிபதி ஆய்ஷா ஆப்தீனை சம்பளத்துடன் கூடிய கட்டாய விடுமுறையில் அனுப்பியுள்ளது.

Related posts

தீ விரவாதம் நாட்டுக்குள் ஊடுறுவதற்கு வழிமுறைகளை ஏற்படுத்தியுள்ளது.

wpengine

வடக்குடன் ,கிழக்கை இணைக்க வேண்டிய எந்த தேவையுமில்லை.-ரிஷாத்

wpengine

பாடசாலைக்கு ஆட்பதிவு திணைக்களத்தின் அறிவிப்பு

wpengine