பிரதான செய்திகள்

நிவாரணம் வழங்கும் போது அரசியல் பிரச்சாரம் செய்யக்கூடாது.

கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் சில அரசியல்வாதிகள், நிவாரணங்களை வழங்கும் போது, அதனை படம்பிடித்து ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக பிரச்சாரம் செய்வது சிறந்த நடவடிக்கை அல்ல எனவும், அப்படி செய்ய வேண்டாம் எனவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய நேற்று கோரிக்கை விடுத்துள்ளார்.


கொரோனா வைரஸ் பரவும் நிலைமையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் போது அதனை பயன்படுத்தி அரசியல் பிரசாரத்தை பெற்றுக்கொள்வதை தவிர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தேசப்பிரிய இதனை கூறியுள்ளார்.


கொரோனா தொற்று நோயை தோற்டிக்க போராடும் நேரத்தில், இலாப நோக்கம் கருதிய பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டாம் எனவும், இப்படியான சந்தர்ப்பங்களில் பேதங்கள் இன்றி செயற்படுமாறும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் கேட்டுள்ளார்.


எது எப்படி இருந்த போதிலும் தற்போதைய நிலைமையில், மதத் தலைவர்கள், வர்த்தக சமூகத்தினர், சமூக சேவையாளர்கள் மற்றும் தனவந்தர்களின் பங்களிப்பை பாராட்டுவதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Related posts

விளக்கம் கோரியவர்களுக்கு சாப்பாடு கொடுத்த ஹக்கீம்! அரசியல் நாடகம்

wpengine

வடக்கு, கிழக்கு, தெற்கு என்ற எந்த வேறுபாடும் இல்லை.நாட்டு மக்கள் என்று தான் பார்கின்றேன்.

wpengine

மன்னார் மாவட்டத்தில் கடும் வறட்சி!

Editor