பிரதான செய்திகள்

நிவாரணப் பொதியை லங்கா சதொச நிறுவனத்தில் இருந்து 3998 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய முடியும்.

இலங்கை மக்களுக்கான விசேட நிவாரணப் பொதியொன்றை வர்த்தகத் துறை அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார்.

10 கிலோ சுப்பிரி சம்பா அரிசி உட்பட 20 அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய இந்த நிவாரணப் பொதியை லங்கா சதொச நிறுவனத்தில் இருந்து 3998 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய முடியும் என   அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  

வர்த்தகத் துறை  அமைச்சரால் வழங்கப்பட்டுள்ள நிவாரணப் பொதியில்,

சுப்பிரி சம்பா 10 கிலோ

ஒரு கிலோ வெள்ளை சர்க்கரை

ஒரு கிலோ சிவப்பு பருப்பு

ஒரு கிலோ இடியப்ப மா

500 கிராம் நெத்தலி

400 கிராம் நூடுல்ஸ்

400 கிராம்   உப்பு

2 தேங்காய் பால் (330 மிலி பாக்கெட்)

100 கிராம் மிளகாய் தூள்

மிளகு தூள் 100 கிராம்

100 கிராம் மசாளா தூள் 

100 கிராம் மஞ்சள்

100 கிராம் தேநீர்

80 கிராம் உடல் லோஷன்

சதோச சந்தன சோப்பு

100 மில்லி கை கழுவும் திரவம்

90 கிராம் சோயாமீட்

சதோச TFM தரப்படுத்தப்பட்ட சலவை சவர்க்காரம்

1 பைக்கற்று பப்படம்

10 முகக்கவசங்கள்

குறித்த பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதி இன்று முதல் லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக நுகர்வோருக்கு  கிடைக்கும் என அமைச்சர் வலியுறுத்தினார்.

Related posts

முஸ்லிம்களில் ஒரு சிலரின் தவறான செயற்பாடு! விமர்சனங்கள் எழுந்துள்ளன அமைச்சர் றிஷாட்

wpengine

ரணில் விக்ரமசிங்கவுக்கு மிகவும் நெருக்கமானவர் ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கவுள்ள

wpengine

இலவச உம்றா திட்டம் 2ஆம் குழு நாளை பயணம்! அமைச்சர் ஹலீம், ஹிஸ்புல்லாஹ் வழியனுப்பி வைப்பு

wpengine