பிரதான செய்திகள்

நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் விஷேட இஸ்லாமிய எழுச்சி மாநாடு

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

றாபிதது அஹ்லிஸ் ஸூன்னாவின் ஏற்பாட்டில் உள்நாட்டு,வெளிநாட்டு உலமாக்கள் கலந்து கொள்ளும் விஷேட இஸ்லாமிய எழுச்சி மாநாடு எதிர்வரும் 24-09-2016 சனிக்கிழமை அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரதேசத்திலுள்ள நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

அஸர் தொழுகையுடன் பிற்பகல்3.30 மணி தொடக்கம் இரவு 10.30 மணி வரை இடம்பெறவுள்ள மேற்படி விஷேட இஸ்லாமிய எழுச்சி மாநாட்டில் சிறப்பு சொற்பொழிவாளர்களாக இந்தியாவின் பிரபல இஸ்லாமிய சொற்பொழிவாளர் அஷ்ஷெய்க் எம்.பீ.ஏ.அப்துல் பாஸித் புஹாரி>ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னதில் முஹம்மதிய்யாவின் பொதுத் தலைவர் அஷ்ஷெய்க் என்.பீ.எம்.அபூபக்கர் ஸித்தீக் (மதனி)>உண்மை உதயம் இஸ்லாமிய பத்திரிகையின் பிரதம ஆசிரியர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.இஸ்மாயில் (ஸலபி)>கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் வைத்திய கலாநிதி எஸ்.எம்.றயீஸூத்தீன் (ஷரயீ)>மருதமுனை தாருல் ஹூதா இஸ்லாமிய கற்கைகள் மகளீர் கல்லூரியின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் கலாநிதி எம்.எல்.முபாறக் (மதனி) ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு முக்கிய தலைப்புக்களில் உரையாற்றவுள்ளனர்.

குறித்த  விஷேட இஸ்லாமிய எழுச்சி மாநாட்டில் அனைத்து இஸ்லாமிய சகோதரர்களையும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு றாபிதது அஹ்லிஸ் ஸூன்னா வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்ககது.unnamed-1

Related posts

தீர்வு கிடைக்காவிட்டால் பதவி விலக தயார்! இராஜாங்க அமைச்சர் நிமல்

wpengine

ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக விண்ணப்பங்களை கோருமாறு வேண்டுகோள்

wpengine

வவுனியா புகையிரத்துடன் மோதி நான்கு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

wpengine