பிரதான செய்திகள்

நிந்தவூர் தபால் நிலையத்தின் சிரேஷ்ட தபாலதிபர் ஏ.எம்.என் றஷீட் அவர்களின் பிரியாவிடை

எம்.ஏ.எம் முர்ஷித்.

தபால் துறை என்பது மக்களின் அன்றாட வாழ்க்கையோடு மட்டுமல்லாது ஊணர்வுகளோடும் ஒன்றிப் பிணைந்தது என்பதை எவராலும் மறுக்க முடியாது என்று நிந்தவூர் பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் தெரிவித்தார்.

நிந்தவூர் தபால் நிலையத்தின் சிரேஷ்ட தபாலதிபர் ஏ.எம்.என் றஷீட் அவர்களின் பிரியாவிடையும், புதிய தபாலதிபர் யூ.எல்.எம் பைஸர் அவர்களுக்கான வரவேற்பும் நிந்தவூர் பிரதான தபாலகத்தில் கடந்த(12) இடம்பெற்றது,

இன்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் தபால் துறையின் சேவையும் தேவையும் கடந்தகாலங்களில் இன்றியமையாததாக இருந்துவந்தன, ஆனால் இப்போது ஏற்பட்டிருக்கும் தொழிநுட்ப மற்றும் தொடர்பாடல் வளர்ச்சியின் காரணமாக அதன் முக்கியத்துவம் குறைந்திருக்கலாம் ஆனாலும் மரபு ரீதியான தொடர்பாடல் முறை என்றவகையில் நவீன வசதிகளை உள்வாங்கி இன்றும் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கிவருகின்றது.

அவ்வாறே எமது தபாலதிபர் ஏ.எம்.என் றஷீட் அவர்களும் கடந்த காலங்களில் நிந்தவூர் மக்களுக்காக சேவையாற்றியுள்ளார், நிந்தவூர் மக்களின் பிரதிநிதி என்ற வகையில், அவருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன் என்றார்.

அத்தோடு நிந்தவூரின் பிரதான தபாலக கட்டிடம் மர்ஹூம் தலைவர் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களால் நிந்தவூர் மக்களுக்காக செய்துகொடுக்கப்பட்ட முதலாவது சேவையாகும்,

இந்த நிலத்தில் இதைக் கட்டுவதற்கு பல தடைகள் இருந்தபோதும் மர்ஹூம் தலைவர் அவர்களது தலைமைத்துவ ஆளுமையால் தத்துணிவின் பெயரில் கட்டிமுடித்தார் என்றார்.

தபாலதிபர் ஏ.எம்.என் றஷீட் பேசுகையில் கடந்தகாலங்களில் எனது கடமையினை செரிவர செய்வதற்கு எமது ஊழியர்களும் நிந்தவூர் மக்களும் எனக்கு மிகுந்த பக்கபலமாக இருந்து உதவி ஒத்தாசைகளை செய்திருக்கின்றனர் அவர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

நிந்தவூர் மக்கள் விருந்தோம்பலில் மட்டுமல்லாமல் அனைவருக்கும் திறந்த மனதோடு உதவக்கூடியவர்கள் என்பதை என்னால் நிறையவே உணர முடிந்தது, இந்த தபால் நிலையத்தினை பராமரிப்பதற்கு திணைக்கள ஒதுக்கீடுகள் போதாத போது நிந்தவூரின் மக்களே அரச நிறுவனம் என்றும் பாராமல் எமக்கு உதவினர் அவர்களுக்கும் நன்றிகள், நிந்தவூர் மக்களுக்காக அயராது சேவை செய்து நிந்தவூர் மக்களின் மனங்களில் வாழும் கெளரவ தவிசாளர் அவர்கள் எனது பிரியாவிடைக்கு வந்து என்னை கெளரவப் படுத்தியமைக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்,

Related posts

ஒரு நாடு; ஒரே சட்டம் கோத்தாவின் விளக்கம்

wpengine

சிறுபோக செய்கைக்கு தேவையான உர வகைகளை இந்தியா வழங்க நடவடிக்கை

wpengine

பாடசாலை சீருடைக்கான வவுச்சர்கள் விநியோகம்

wpengine