பிரதான செய்திகள்

நிதியமைச்சர் அந்த சுமையை பற்றி பேசுகிறாரே தவிர, பொதுப்பணித்துறை சுமையை தாங்க முடியாது என்று பேசவில்லை

அரச சேவையும் அரச உத்தியோகத்தரும் நாட்டுக்கு சுமை என நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்களில் அரசியல்வாதிகள் தேவையில்லாமல் ஊழியர்களை நிரப்புவதால் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

உத்தியோகபூர்வமற்ற அரசியல் தீர்மானங்களைப் பெறுவதற்கும் விருப்பு வாக்குகளைப் பெறுவதற்கும் ஒவ்வொரு அரசாங்கமும் இடைவிடாது அரச நிறுவனங்களை நிரப்பியுள்ளதாக அவர் கூறினார்.

இதனால் அரச நிறுவனங்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகவும், கோப் அறிக்கைகளின் பிரகாரம் அது உறுதிப்படுத்தப்படும் எனவும் அழகப்பெரும தெரிவித்தார்.

நிதியமைச்சர் அந்த சுமையை பற்றி பேசுகிறாரே தவிர, பொதுப்பணித்துறை சுமையை தாங்க முடியாது என்று பேசவில்லை என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆசிரியர் அதிபர்களின் சம்பள முரண்பாடுகள் இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் தீர்க்கப்பட்டுள்ளது.

முழு அரச சேவையினருக்கும் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்த போதிலும், பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அது சாத்தியப்படவில்லை என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.  

Related posts

Braking மன்னாரில் கொரோனா அனைவருக்கும் (P.C.R) பரிசோதனை-

wpengine

நல்லாட்சி அரசாங்கத்துக்கு புதிய குத்தகை வாழ்க்கை நீடிப்பு கிடைத்துள்ளது.

wpengine

எதிர்வரும் நாட்களில் முட்டை மற்றும் கோழி இறைச்சிக்கு தட்டுப்பாடு ஏற்படும்.

wpengine