பிரதான செய்திகள்

நிதி மோசடி! நாமல் குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜர்

மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷ பாரிய நிதி மோசடி குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகியுள்ளார்.

தெஹிவளை மிஹிந்து மாவத்தையில் காணப்படும் சொத்து ஒன்று  தொடர்பில் வாக்கு மூலம் அளிக்கவே பாரிய நிதி மோசடி குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அவர் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சொத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் சிராந்தி ராஜபக்ஷவிற்கு சொந்தமானது.

இது குறித்து, ஏற்கனவே சிராந்தி ராஜபக்ஷ மற்றும் யோசித ராஜபக்ஷவிடம் விசாரணை நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டும்.சிறுவர்களுக்கு பாதுகாப்பு இல்லை

wpengine

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் பாராளுமன்றில் நிறைவேற்றம்!

Editor

கிழ‌க்கு முத‌ல்வ‌ரை பாராட்டும்! உல‌மா க‌ட்சி த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

wpengine