செய்திகள்பிரதான செய்திகள்

நிதி அமைச்சகத்தின் பதிவுசெய்யப்பட்ட 176 வாகனங்க இல்லை , தகவல்களைக் கண்டறிய நடவடிக்கை.!

நிதி அமைச்சகத்தின் பெயரில் பதிவுசெய்யப்பட்ட 257 வாகனங்களில் 176 வாகனங்களின் இருப்பை உறுதி செய்ய முடியவில்லை என தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்ட தணிக்கை அறிக்கை தெரிவித்துள்ளது.

இவற்றில், 99 வாகனங்களின் எந்தவொரு தகவலும் தணிக்கைக்கு சமர்ப்பிக்கப்படவில்லை.

நிதி அமைச்சகத்தின் பெயரில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து வாகனங்களின் இருப்பு மற்றும் உரிமையை சரிபார்க்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தணிக்கை பரிந்துரைத்துள்ளது.

இதேவேளை, இந்த 176 வாகனங்கள் தொடர்பான தகவல்களைக் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிதியமைச்சகத்தின் தலைமை கணக்கியல் அதிகாரி தணிக்கைக்கு தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவல், 2023 ஆம் ஆண்டுக்கான நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட தணிக்கை அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது.

Related posts

தேர்தல் இல்லாட்டி இராஜினமா

wpengine

வவுனியா பிரதேச செயலக வீட்டு திட்ட தெரிவில் பிரச்சினை! உத்தியோகத்தர்கள் பக்கசார்பு

wpengine

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள், மீண்டும் கடமைக்கு திரும்புவார்கள் என அரசாங்கம் எதிர்பார்ப்பு

wpengine