பிரதான செய்திகள்

நிகழ்வில் பங்கேற்பதை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தவிர்த்துள்ளார்.

இலங்கையின் 72வது சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பதை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தவிர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி நாளை அவர் சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்கமாட்டார்.

அவருடைய அலுவலகம் இது தொடர்பில் அறிவித்தலை விடுத்துள்ளது. எனினும் காரணம் அறிவிக்கப்படவில்லை.

இதேவேளை பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவும் தாம் சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.அவரும் காரணத்தை அறிவிக்கவில்லை.

இந்த நிலையில் 72வது சுதந்திர தின நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நாளை கொழும்பில் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

Related posts

சமூக ஊடகங்களில் அரசியல் செய்யும் இந்தியாவின் இன்றைய நிலை

wpengine

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக வாக்களிக்கும் மனநிலை

wpengine

மக்கா மஸ்ஜிதுல் ஹரம் இமாமுடன் ஹிஸ்புல்லாஹ் விசேட சந்திப்பு

wpengine