பிரதான செய்திகள்

நாளை பாராளுமன்றத்தில் விஷேட பாதுகாப்பு

நாடாளுமன்றிற்கு நாளை விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து நாளை நாடாளுமன்றில் விவாதமும் வாக்கெடுப்பும் நடத்தப்பட உள்ளது.

இந்த நிலையில், நாளை நாடாளுமன்றையும் அதனை அண்டிய பகுதிகளிலும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் கலகத் தடுப்பு பொலிஸார் ஆகிய தரப்புக்கள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாக தங்களது வாக்குகளை அளிப்பதற்கு தேவையான பின்னணி உருவாக்கிக் கொடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் நாடாளுமன்றிற்கு தடையின்றி வருவதற்கு தேவையான ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக நாடாளுமன்றிற்கு உள்ளேயும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

Related posts

மன்னார் சவூத்பார் விளையாட்டு கழகத்திற்கு நிதியினை ஒதுக்கிய அமைச்சர் றிஷாட்! நன்றி தெரிவிப்பு

wpengine

என்னை தண்டிக்க புதிய நீதி அமைச்சர் மஹிந்த ஆவேசம்

wpengine

சற்றுமுன்பு மறியல் போராட்டகாரர்களால் ஹுனைஸ் எம்.பி விரட்டியடிப்பு

wpengine