பிரதான செய்திகள்

நாளை சாய்ந்தமருதில் எழுத்தாளர் ஏ.பீர் முஹம்மது எழுதிய எஸ். பொன்னுத்துரை முஸ்லிம்களுடனான உறவும் ஊடாட்டமும், நூல் அறிமுக விழா

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
முன்னாள் கோட்டக்கல்விப் பணிப்பாளரும் திறன்நோக்காளரும் கவிஞரும் எழுத்தாளருமான கலாபூஷணம் ஏ. பீர்முகம்மது எழுதிய ‘எஸ். பொன்னுத்துரை முஸ்லிம்களுடனான உறவும் ஊடாட்டமும், எனும் நூலின் அறிமுக விழா  சாய்ந்தமருது பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நாளை  (27) சனிக்கிழமை  காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. 
சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார அதிகார சபையின் ஏற்பாட்டில், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ். புவனேந்திரன் கலந்து சிறப்பிக்கவுள்ளார். 

நிகழ்வில், விசேட அதிதியாக மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரீ.எம். ரிம்சான் கலந்து கொள்வதோடு, நூலின் முதற்பிரதியை பிரபல தொழிலதிபர் இக்ரா  யு. சத்தார் பெற்றுக் கொள்கிறார்.
சிறப்பு பிரதிநிதிகளை ஐக்கிய காங்கிரஸின் தலைவர் முபாரக் அப்துல் மஜீத் மற்றும் அரசியல் ஆய்வாளர் எம்.எச்.எம். இப்ராஹிம் ஆகியோர் பெற்றுக் கொள்கின்றனர்.
இந்நிகழ்வில் கல்விமான்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்த அரசு ஆட்சிக்கு வந்ததன் பின்னர் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளன.

wpengine

அனர்த்த நிலைமை பாராளுமன்றம் இன்று கூடுகின்றது

wpengine

யாழில் அதிகரிக்கும் கொவிட் தொற்று!

Editor