பிரதான செய்திகள்

நாளை கல்முனை ஜாமியா மன்பயில் ஹிதாயாவின் பட்டமளிப்பு விழா

(எம்.எஸ்.எம். ஸாகிர்)

கல்முனை ஜாமியா மன்பயில் ஹிதாயா அரபுக் கல்லூயின் 11ஆவது மௌலவி ஆலிம் பட்டமளிப்பு விழா மற்றும்12ஆவது தலைப்பாகை சூட்டும் விழா மற்றும் ஜவாதுல் ஜாமிஆ எச்.எம்.பீ. முகைதீன் ஹாஜியார் மண்டப திறப்பு விழா ஆகிய நிகழ்வுகள் நாளை மறுதினம் (17) புதன்கிழமை காலை 9.00 மணிக்கு கல்முனை ஜாமிஆ மன்பயில் ஹிதாயா அரபுக் கல்லூயின் கலாபீட கலாசார மண்டபத்தில் இடம்பெறும்.

கல்முனை ஜாமியா மன்பயில் ஹிதாயா அரபுக் கல்லூயின் கலாபீட அதிபர் மௌலவி பீ.எஸ். முஹம்மது அலி (அன்வாரி பாஸில் மளாஹிரி – இந்தியா) தலைமையில் கலாபீட ஆளுனர்சபைத்தலைவர் எஸ். எல். மீராசாஹிப் முன்னிலையில்  இடம்பெறும் இவ்விழாவில், கலாபீட மாணவர்கள், பெற்றோர்கள்,  ஊர்ப்பிரமுகர்கள், புத்திஜீவிகள், உலமாக்கள் எனப்பலரும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

Related posts

கிராம சேவையாளர் மீது இலஞ்சம்,ஊழல் குற்றச்சாட்டு ! கைது

wpengine

பைசல் காசிமின் அறிக்கை! பிள்ளைகள் எழுதிப்பழகியது போல உள்ளது.

wpengine

வவுனியா பாடசாலை அதிபரின் பாலியல் சேட்டை! அதிபர் கைது

wpengine