பிரதான செய்திகள்

நாளை அல்லது நாளை மறுதினம் இந்த பதவி ஏற்பு நிகழ்வு நடைபெறலாம்

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சுப் பொறுப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்கான நேரத்தை அறிவித்தால் பதவியேற்கத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.


பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று மாலை அலரி மாளிகையில் நடாத்திய விசேட சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

இராஜினாமா செய்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சகலரும் மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்பது என ஏகமனதாக தீர்மானம் எடுத்துள்ளோம்.

இந்த நியமனத்தை பெற்றுக் கொள்வதற்கான நேரத்தை ஜனாதிபதி அறிவிப்பதே எஞ்சியுள்ளது.

பெரும்பாலும் நாளை அல்லது நாளை மறுதினம் இந்த பதவி ஏற்பு நிகழ்வு நடைபெறலாம், நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனும் அன்றைய தினம் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்பார் என்றார்.

Related posts

நம்பிக்கையில்லா பிரேரணை! சஜித்தின் நடவடிக்கைக்கு அனுரகுமார ஆதரவு

wpengine

தனியார் பஸ் ஒடுமா? இன்று இறுதி திர்மானம்

wpengine

2வது நாளாகவும் தொடர்ந்த மன்னார் சமுர்த்தி பயனாளிகளின் போராட்டம்!

Editor