செய்திகள்பிரதான செய்திகள்

நாளை 3 மணித்தியாலம் பணிப்புறக்கணிப்பில் தாதியர்கள் சங்கம்!

மேலதிக நேரக் கொடுப்பனவு குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளைய தினம் காலை 10 மணி முதல் 3 மணித்தியாலங்களுக்கு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்த அந்த சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சமன் ரத்னப்பிரிய,

குறித்த காலப்பகுதியினுள் சகல வைத்தியசாலைகளுக்கும் முன்பாக தங்களது சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்தார்.

வைத்தியர்களுடனான கலந்துரையாடலிலும் கூட அவர்கள் கோரிய கொடுப்பனவை வழங்குவதற்கான நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாக அறியமுடிகிறது.

எனவே, தங்களுக்கு நியாயமான கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும் எனக் கோரி, நாளைய தினம் 3 மணிநேர பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சமன் ரத்னப்பிரிய, தெரிவித்துள்ளார்.

Related posts

இன்று மாலை 6மணிக்கு ஊரடங்கு சட்டம்! திங்கள் வரை

wpengine

செக்ஸ்சில் இலங்கை மூன்றாம் இடம்

wpengine

17ஆம் திகதி வரை அனைத்து வியாபார நிலையங்களும் மூடிவிட வேண்டும்

wpengine