பிரதான செய்திகள்

நாம் அதை எதிர்கொள்ள முடியும்! நாம் அவர்களை அச்சமின்றி எதிர்கொள்கிறோம்.

நாட்டின் இறையாண்மையை பாதுகாத்துக் கொண்டு ஜெனீவா மனித உரிமை பேரவையின் தீர்மானங்களுக்கு அச்சமின்றி முகங்கொடுக்க அரசாங்கம் தயாராக உள்ளதாக ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பங்கேற்கும் கிராமத்துடன் கலந்துரையாடலின் 16ஆவது நிகழ்ச்சித் திட்டம் மாத்தறை மாவட்டத்தின் பிட்டபத்த பிரதேச செயலக பிரிவிலுள்ள கிரிவெல்கெல வடக்கு மூன்றாம் பியவர கிராம உத்தியோகத்தர் பிரிவில் இன்று (27) நடைபெற்றது.

இதன்போது உரையாற்றி ஜனாதிபதி இதனை தெரிவித்திருந்தார்.

´உயிர்த்த ஞாயிறு சம்பவம் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் ஒவ்வொரு பக்கத்திலும், தேசிய பாதுகாப்பு குறித்து கடந்த அரசாங்கம் அக்கறை காட்டாததால் தான் இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் பேரில் இராணுவ வீரர்கள் சிறையில் அடைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டன. அந்த வழக்குகளில் இருந்து அவர்களை வெளியேற்றுவதில் இப்போது எனக்கு ஒரு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. சர்வதேசத்திற்கு சென்று ஜெனீவாவில் தீர்மானங்களுக்கு இணை அனுசரணை வழங்கி எமது இறையாண்மையை எமது சுதந்திரத்தை முழுமையாக அழித்து விட்டார்கள்.

அந்த இணை அனுசரணையில் இருந்து நாம் விலகியுள்ளோம். அவர்கள் எங்களுக்கு எதிராக செயல்படுகிறார்கள்.அது ஒரு பொருட்டல்ல. நாம் அதை எதிர்கொள்ள முடியும்.நாங்கள் ஒரு சுதந்திர நாடு. நாம் எங்கள் வேலையைச் செய்யலாம்.நாம் அவர்களை அச்சமின்றி எதிர்கொள்கிறோம். அதுதான் தேவை. இந்தியப் பெருங்கடலில் இருக்கும் சக்திகளின் அதிகார போராட்டதில் நாம் தலையிடத் தேவையில்லை. அதிகாரப் பகிர்வு என்ற பெயரில் பிரிவினைவாதத்தை மீண்டும் கொண்டுவருவதற்கும் அவர்களின் புவிசார் அரசியல் நலன்களை நிறைவேற்ற நமது இறையாண்மையைக் காட்டிக் கொடுப்பதற்கும் நாங்கள் தயாராக இல்லை´ என்றார்.

Related posts

றீட்டா ஐஷாக் நாடியாவை புத்தளம்வாழ் யாழ்- கிளிநொச்சி வெளியேற்றப்பட்ட சிவில் சமூக ஒன்றியத்தின் பிரநிதிகள் சந்திப்பு!

wpengine

வீடமைப்பு விவகாரம் தொடர்பில் ஹிஸ்புல்லாஹ் மறுப்பறிக்கை

wpengine

முசலி மக்களின் 7வது நாள் கவனயீர்ப்பு போராட்டம்! ஆதரவு வழங்கிய அடைக்கலம் நாதன்,டெனீஸ்வரன்,சிவாஜிலிங்கம்

wpengine