பிரதான செய்திகள்

நாமல் 30 மில்லியன் ரூபாவை முறைகேடு விசாரணை! செப்டம்பர் 14 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவருக்கு எதிராக 30 மில்லியன் ரூபாவை முறைகேடான நிதியைப் பயன்படுத்தி பங்குகளை கொள்வனவு செய்த குற்றச்சாட்டின் பேரில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மேலதிக விசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையாகினர் மேலதிக விசாரணை செப்டம்பர் 14 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Gowers Corporate (Pvt) Ltd  நிறுவனத்திடம் இருந்து பங்குகளை கொள்வனவு செய்வதற்காக 30 மில்லியன் ரூபாவை முறைகேடான பணத்தை முதலீடு செய்த குற்றச்சாட்டின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்பட ஆறு பேருக்கு எதிராக நல்லாட்சி அரசாங்கத்தின் போது பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts

ரணிலின் திட்டத்தை ரத்துசெய்த மைத்திரி! பிரயோசனமில்லை

wpengine

இஸ்ரேலின் பெண் பொலிஸ் தூப்பாக்கி சூடு! துருக்கி அதிபர் கண்டனம்

wpengine

இலங்கை பயணம்! கனடா எச்சரிக்கை -அட்மிரல் ஜயநாத் கொலம்பகே

wpengine