பிரதான செய்திகள்

நாமலின் வலையில் சிக்கிய ரோசி சேனாநாயக்கவின் மகள்?

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் நடிகையுமான அனார்கலி ஆகர்ஷா மற்றும் முன்னாள் அமைச்சரான ரோசி சேனாநாயக்கவின் மகன் திஸக்யா மாயா சேனாநாயக்க குறித்து நிதி மோசடி விசாரணை பிரிவு அவதானம் செலுத்தியுள்ளது.

2013ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் விசாரணை நடத்தப்படவுள்ளதாக விசாரணை பிரிவின் உட்தரப்பு தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

முன்னாள் கண்காணிப்பு உறுப்பினரான சஜித் வாஸ் குணவர்தனவின் பொறுப்பின் கீழ் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு (CHOGM) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அவரது தலைமையில் அதற்காக அலுவலகம் ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டிருந்தது.

அனார்கலி தற்போது வரையில் அமெரிக்காவில் வசித்து வருகின்ற நிலையில், அவரினால் கொக்கலவில் கட்டப்பட்டுள்ள ஹோட்டலை கட்டுவதற்கு பணம் பெற்றுக் கொண்ட முறை தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த ஹோட்டலை கட்டுவதற்கு அரசாங்க காணி ஒன்று பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்நிலையில்அந்த இடம் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவினால் வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன் அனார்கலிக்கு தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளதாக நிதி மோசடி விசாரணை பிரிவு தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இதேவேளை அனார்கலியின் தாயாருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் வர்த்தகர் நஹில் வீரசூரிய அனார்கலி ஊடாக மேற்கொண்ட கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஆராய்வதற்கு பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு ஆயத்தமாகியுள்ளது.

இதேவேளை, ரோசி சேனாநாயக்கவின் மகன் London College of Fashionல் நவநாகரிகம் தொடர்பிலான பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

“இயற்கையை ஒன்றி வாழப் பழகுவோம்” முசலியில் ஆரம்பித்த அரசாங்க அதிபர்

wpengine

தாஜுடீன் கொலையுடன் பிரபல நபரின் மனைவிக்கு தொடர்பு

wpengine

கண்டி நோக்கி பயணம் செய்யும் அமைச்சர் றிஷாட்

wpengine