பிரதான செய்திகள்

நான் மரணிக்க விரும்பவில்லை! முஸ்லிம் அடிப்படைவாதத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பேன்! ஞானசார

எனக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளது. ஆனாலும் வெறுமனே மரணிக்க நான் விரும்பவில்லை. இனத்திற்காகப் போராடி முஸ்லிம் அடிப்படைவாதத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பேன் என ஞானசாரதேரர் தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு நேற்றைய தினம் வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் அங்கு கருத்துத் தெரிவிக்கையில்,

அனைத்து தரப்புகளிலும் எமக்கு எதிரிகள் உள்ளனர். சிலர் போராட்டத்தை தவறான பார்வையில் காணுகின்றனர். ஐக்கிய தேசிய கட்சி , சுதந்திர கட்சி , மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இவர்கள் அனைவரும் தமது கட்சி நிறங்களின் கண்ணாடி ஊடக பார்க்கின்றனர்.

இவர்கள் அனைவரும் கட்சி கண்ணாடிகளை அகற்றி விட்டு பார்த்தால் தான் உண்மை நிலையை அறிய முடியும். எனக்கு உயிரச்சுறுத்தல் உள்ளது. அது குறித்த தகவல்களை சம்மந்தப்பட்ட தரப்புகளுக்கு தெரியப்படுத்தியுள்ளேன். நீதிமன்றத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் எமக்கு மரணம் எவ்வாறு வரும் என்று தெரியாது. ஆனால் வெறுமனே மரணிக்க நான் விரும்ப வில்லை.

பிரச்சினைகளுக்காக முன்னின்று இனத்திற்காக போராடி 100 நாட்கள் உயிர் வாழ்ந்தாலும் போதும் என்றே நான் கருதுகின்றேன். இந்த நிலைப்பாட்டில் இருந்து கொண்டு தான் முஸ்லிம் அடிப்படைவாதத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்கின்றேன்.

பயணத்தை ஆரம்பித்து தொடரும் போது அட்டைகள் காலில் தொற்றுவது இயற்கையானது. ஆனால் எமது இலக்கு புனிதமானது என்றால் அது வெற்றி இலக்கை அடையும் . இலங்கை பௌத்த நாடு என்ற வகையில் அந்த ஆசிர்வாதம் எமக்குள்ளது.

சத்திய தர்மத்தின் வழியிலேயே நாங்கள் பயணிக்கின்றோம். எனவே இன்று திரைக்கு பின்னால் இருந்துக் கொண்டு ஆட்டம் போடும் குழுக்கள் வெளிவரும் நாட்கள் வரும். அந்த காலம் வருகையில் நாங்கள் சில சந்தர்ப்பங்களில் மரணித்திருப்போம்.

ஆனால் மக்கள் எமக்கு சிலை செய்வார்கள். எமது எச்சரிக்கையை பொருட்படுத்தாமையின் விளைவே இது என்று ஒருநாள் உணர்வார்கள்.

1983 ஆம் ஆண்டில் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆயுதம் தூக்குவதற்கு முன்னர் செல்வநாயகம் போன்றவர்கள் 1930 களில் அதற்கான அடித்தளத்தை இட்டனர்.

எனவே இன்று முஸ்லிம் அடிப்படைவாதம் தொடர்பில் குரல் எழுப்புகின்றோம். விடுதலைப் புலிகளை விட 100 மடங்கு இது முன்னோக்கிய ஒன்றாகவே அமையும். நல்லிணக்கத்தை விரும்பும் சிங்களம் , தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு முஸ்லிம் அடிப்படைவாதம் பெரும் பிரச்சினையாக அமையும்.

எனவே அவசரமாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். நாட்டின் பொருளாதார அபிவிருத்திகளுக்கு முன்னுரிமை வழங்குகின்றதைப் போன்று இந்த பிரச்சினைக்கும் அவசரமாக தீர்வு காணப்பட வேண்டும்.

பிளவுப்பட கூடிய அனைத்து விடயங்களும் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளன. முகத்தை மறைத்தல், தாடி வளர்த்தல், உணவு முறைமை ஹலால் மயமாக்கும் திட்டம் உள்ளிட்ட அனைத்து விடயங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

நாட்டிற்கு அழிவை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. அறிவுசார்ந்த முஸ்லிம் சமூகம் இந்த பிரச்சினையை பேசுவதற்கு முன்வர வேண்டும். அப்போது தான் தீர்வை எட்ட முடியும். இலங்கையை போன்று நல்லிணக்கம் மிக்க, உயிரச்சுறுத்தல் அற்ற நாடு முஸ்லிம்களுக்கு உலகில் வேறு எங்குமே இல்லை.

இலங்கையைப் போன்று பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் மற்றும் லிபியா போன்ற நாடுகளில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு உள்ளதா? உயிர் பயம் இன்றி முஸ்லிம்கள் இலங்கையில் வாழ்கின்றனர். பௌத்தர்களின் நல்லிணக்கத்தினால் தான் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டிருந்தமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.

Related posts

தமிழ்மொழித் தலைமைகளின் மீளிணைவிலுள்ள இடர்கள்!

wpengine

வில்பத்து தன்மீதும், வடக்கு முஸ்லிம் மக்கள் மீதுமான இனவாதிகளின் போலிக்குற்றச்சாட்டு

wpengine

மன்னார் நகர சபையின் முன்னால் தலைவர் ஞானப்பிரகாசம் மாரடைப்பால் மரணம்

wpengine