பிரதான செய்திகள்

நானாட்டான் வைத்தியசாலை வைத்தியரின் அசமந்த போக்கு! மரணிக்கும் நிலையில் அப்பாவி மக்கள்

மன்னார் நானாட்டன் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட வயோதிப பெண் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக பேச்சு, மூச்சற்ற நிலையில் இன்று மதியம் 1.35 மணியளவில் நானாட்டான் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன் போது குறித்த வைத்திய சாலையின் வைத்தியர் தனது விடுதிக்கு சென்றிருந்தார்.

எனினும் குறித்த வைத்தியர் சிறிது நேரத்தில் வந்து விடுவார் என கூறி, சம்பவ நேரம் கடமையில் இருந்த தாதியர் நோயாளியை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளார்.

பின்னர் தாதியரினால் நாடித்துடிப்பு அளக்கும் கருவியின் மூலம் நாடித்துடிப்பை அளந்து விட்டு, வைத்தியரிடம் சென்று குறித்த பெண்ணின் நிலை குறித்து கூறிய போதும், குறித்த வைத்தியர் தான் உணவருந்துவதாகவும், உணவருந்தி முடிந்த பின்பே தான் வந்து நோயாளியை பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.

எனினும் நேரம் 2.10 மணியாகிய நிலையில் வைத்தியார் வந்து குறித்த குறித்த நோயாளியை பார்க்கவில்லை.

இதனால் அச்சமடைந்த உறவினர்கள் உடனடியாக குறித்த வயோதிப பெண் நோயாளியின் நிலை மோசமாக இருந்த நிலையில் குறித்த நோயாளியை மீண்டும் நானாட்டான் பிரதேச வைத்தியசாலையில் இருந்து முச்சக்கர வண்டியில் ஏற்றி மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

இதன் போது கூட நானாட்டான் பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர் வந்து நோயாளியை பார்க்கவில்லை என உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தற்போது குறித்த வயோதிப பெண் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

நானாட்டான் பிரதேச வைத்தியசாலையில் தொடர்ந்தும் குறித்த வைத்தியரின் தன்னிச்சையான செயற்பாட்டின் காரணமாக இவ்வாறான சம்பவங்கள் நாளாந்தம் நடை பெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக மக்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருவதாகவும், உயர் அதிகாரிகள் குறிப்பாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு, நானாட்டான் பிரதேச மக்கள் குறித்த வைத்திய தேவைக்காக எதிர் நோக்கும் அவசர பிரச்சினைக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு அந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் திருமதி யூட் ரதனி அவர்களை தொடர்பு கொண்டு வினவிய போது,

நானாட்டான் பிரதேச வைத்தியசாலையில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளதாக நான் அறிகின்றேன்.

எனினும் பொது மக்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களினூடாக இது வரை எனக்கு எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கப்பெறவில்லை.

Related posts

அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார இராஜினாமா

wpengine

ஜனாதிபதியை விடவுமா பாராளுமன்ற உறுப்பினர்கள் அறிந்து வைத்துள்ளார்கள்.

wpengine

யாழ் போதனா வைத்தியசாலையில் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு

wpengine