பிரதான செய்திகள்

நானாட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மீது பிரதேச சபை தவிசாளர் குற்றச்சாட்டு

நானாட்டான் பிரதேச செயலகத்தில் கிராம சேவையாளராக கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவரும் அதே போன்று இன்னும் ஒரு அதிகாரியும் சுமார் 70க்கு மேற்பட்ட அரச காணியினை பலவந்தமான முறையில் சுவிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர் மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் குற்றச்சாட்டினை முன்வைத்துளார்.

இதற்கு பின்புலமாக மேலும் சில அரச அதிகாரிகள் துணையாக இருந்துவருகின்றார்கள் எனவும்,இது தொடர்பான ஆவணங்கள் ஆதாரங்கள் என்னிடம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக விசாரணை குழு ஒன்றினையும் அமைத்து அடுத்த நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவர்கள் அரசாங்க அதிபருக்கு கோரிக்கையினை விடுத்துள்ளார்கள்.

Related posts

அமைச்சர்கள் உள்ள மீள்குடியேற்ற செயலணியினை நிராகரிக்கும் விக்னேஸ்வரன்.

wpengine

மக்களுக்காக பணியில்! அரச ஊழியர்களினால் பாரிய தாமதம்

wpengine

யாழ்நகரில் இரு உணவகங்கள் நீதிமன்றால் சீல் வைப்பு!

Editor