பிரதான செய்திகள்

நாட்டு மக்கள் மிகவும் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த அரசாங்கத்திற்கு ஈவு இரக்கம் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பு பத்திரிகையொன்றிடம் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

சவூதி அரேபியாவில் எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், உலக சந்தை விலை அதிகரிப்பு என்ற போர்வையில் எரிவாயு விலையை அரசாங்கம் அதிகரித்துள்ளது.

நாட்டு மக்கள் மிகவும் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த அரசாங்கம் ரோபோ போன்றது, ஈவு இரக்கம் எதுவும் கிடையாது.
எரிவாயு விலை அதிகரிப்பினால் உணவு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. நகரங்களில் மட்டும் காணப்பட்ட எரிவாயு சிலிண்டர் பயன்பாடு இன்று கிராமங்களிலும் வியாபிக்கப்பட்டுள்ளன.

எரிவாயு மட்டுமன்றி இவர்கள் ஏதேனும் ஓர் பொய்யைக் கூறி மின்சாரம், நீர்க்கட்டணம் என்பனவற்றையும் அதிகரிக்கக்கூடும் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Related posts

மார்க்க கடமையினை கூட உடைத்தெறிகின்ற சமுகமாக இருக்கின்றோம் -அமீர் அலி

wpengine

வில்பத்து விவகாரத்தின் பின்னணியில் சீனா?

wpengine

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண பரீட்சைகள் ஒத்திவைப்பு!

Editor