பிரதான செய்திகள்

நாட்டு நலனையும்,சமாதானத்தையும் கருத்திற்கொண்டே ஞானசார தேரர் ஆஜராகாமல் இருக்கின்றார்

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு ஏதேனும் நடந்தால்நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓடும் அபாயமிருக்கின்றது.

எனவே, நாட்டு நலனையும்,சமாதானத்தையும் கருத்திற்கொண்டே அவர் ஆஜராகாமல் இருக்கின்றார் என்று அவ்வமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலாந்த வித்தானகேதெரிவித்தார்.

பொதுபலசேனா அமைப்பின் ஊடகவியலாளர் மாநாடு நேற்றுப் பகல் கொழும்பிலுள்ளஅவ்வமைப்பின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிறைக்குள் செல்வதற்கோ, பொலிஸ்நிலையம் போவதற்கோ ஞானசார தேரர் உள்ளிட்டதேரர்கள் அச்சப்படவில்லை. அநீதி இழைக்கப்பட்டிருப்பின் சிறைவாசம் செல்வதற்குஆயிரக்கணக்கான பிக்குகளும், இளைஞர்களும் தயார்நிலையிலேயே இருக்கின்றனர்.

ஆனால், அதற்குரிய வழிமுறைகள் உரிய வகையில் இடம்பெறவேண்டும்.நீதிமன்றத்தில் ஏன் ஆஜராகவில்லை என்பதற்குரிய காரணங்கள் இன்று (நேற்று)நீதிமன்றத்தில் எமது சட்டத்தரணியால் தெளிவுபடுத்தப்பட்டது.

ஞானசார தேரருக்கு உயிர் அச்சுறுத்தல் இருக்கின்றது எனப் பொலிஸ்மா அதிபரிடம்கடந்த 24ம் திகதி சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில்தான் அவருக்குநோயும் ஏற்பட்டது. இது திடீரென ஏற்பட்ட நோய் அல்ல. தொடர்ச்சியாக அவர்சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதற்கு முன்னர் கொரியாவிலும், இலங்கையிலும்அவருக்கு சத்திரசிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. மற்றுமொரு சத்திரசிகிச்சைக்கும்அவர் உட்படுத்தப்படவுள்ளார்.

இப்படி முடியாத கட்டத்திலும் தன் இனத்துக்காகஅவர் குரல் கொடுத்து வருகின்றார்.தன்னைக் கொலை செய்து விடுவார்கள் என்ற அச்சத்தால் ஞானசார தேரர் ஓடி ஒழியவில்லை. அப்படி அச்ச நிலை அவரிடம் இருந்திருக்குமானால் இந்த அமைப்பைவழிநடத்தியிருக்கமாட்டார்.

ஐ.எஸ். அமைப்பின் ஊடாக ஞானசார தேரரைக் கொலை செய்யும் சூழ்ச்சிதீட்டப்பட்டுள்ளது.

எனவே, ஞானசார தேரருக்கு ஏதேனும் நடந்தால் நாட்டில் இரத்தஆறு ஓடும்.

ஆகவே, நாட்டின் சமாதானத்துக்கு பங்கம் ஏற்பட்டுவிடக்கூடாதுஎன்பதற்காகத்தான் அவர் ஆஜராகாமல் இருக்கின்றார். மாறாக, தனக்கு உயிர்அச்சுறுத்தல் என்பதற்காக அல்ல.

சிறைச்சாலைக்குள் வைத்தே கைதிகள் கொல்லப்படுகின்றனர். சிறைச்சாலை வாகனங்கள்மீது சூடு நடத்தப்படுகின்றது. இப்படியான அபாயநிலை இருக்கின்றது.

அதேவேளை, முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீது தீவைத்த சம்பவத்துடன்தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ள நபர்பொதுபலசேனா அமைப்பின் உறுப்பினர் எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்குறிப்பிட்டுள்ளார். அந்தக் கூற்றை நிராகரிக்கின்றோம்.

அமைப்பின் உறுப்பினர் என்றால் அடையாள அட்டை இருக்கவேண்டும். அப்படி எதுவும்அவரிடமில்லை. எமது அலுவலகத்துக்கு வருபவர்களெல்லாம் அமைப்பு உறுப்பினர்கள்அல்லர்.கடந்த 5 வருடங்களில் பொதுபலசேனா அமைப்பு எந்தவொரு வன்முறையையும் தூண்டவில்லை.எனவே, கூட்டத்தில் பங்கேற்றார் என்பதற்காக அவரை எமது அமைப்புடன்தொடர்புபடுத்த முடியாது என்றார்.

Related posts

முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக பதவி விலகியமை மிக அழகாக அரங்கேற்றப்பட்ட நாடகம்.

wpengine

வடக்கு அபிவிருத்தி அமைச்சு டி.எம்.சுவாமிநாதனிடம்

wpengine

றிப்கான் பதியுதீனுக்கு பதிலடி கொடுத்த வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன்

wpengine