பிரதான செய்திகள்

நாட்டில் தீவிரமடையும் டெங்கு நோய்!

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதி வரை டெங்கு நோயினால் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.கடந்த இரண்டு நாட்களில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் 439 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.அதன்படி, இந்த வருடத்தில் இதுவரை நாட்டில் 49,759 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.மேல் மாகாணத்தில் மாத்திரம் 24,837 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.நாடளாவிய ரீதியில் இதுவரை 61 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அதிக டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

Related posts

கல்முனையில் இனவாதம் இயலாமையால் வென்றதா..??

wpengine

வடக்கில் பெருமளவிலான இளைஞர், யுவதிகள் இராணுவத்தில் இணைவு!

Editor

அமைச்சர் றிஷாட் தலைமையில் முசலியில் கிளை மறுசீரமைப்பு

wpengine