செய்திகள்பிரதான செய்திகள்

நாட்டில் கல்விக் கட்டமைப்பை மாற்றியமைக்க ‘கல்வி பேரவை’ ஒன்றை நிறுவ அரசாங்கம் தயார் . !

நாட்டில் கல்விக் கட்டமைப்பை மாற்றியமைக்க ‘கல்வி பேரவை’ ஒன்றை நிறுவ அரசாங்கம் தயாராக இருப்பதாக பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

தேசிய கல்வி நிறுவனத்தின் மீகொடையில் உள்ள கல்வி பீட கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.

”2026 ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட உள்ள புதிய கல்வி சீர்திருத்தத்தில், அர்ப்பணிப்புடன் செயல்படும், நல்ல திறன் கொண்ட, கல்வியில் வளம் மிக்க கல்வியாளர்களை உருவாக்க அரசாங்கம் விரும்புகிறது.

வாக்குறுதியளித்தபடி, பொது சேவையில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தரங்களை முதல் 10 சம்பள பிரிவுகளுக்குள் கொண்டு வர முடிந்தது. யார் என்ன சொன்னாலும் அது உண்மைதான். நான் மீண்டும் சொல்கிறேன், நாங்கள் அதைச் செய்துள்ளோம். நிதி அமைச்சும், திறைசேரியும் அதை எங்களுக்குத் தெளிவாகத் தெரிவித்துள்ளன. எதிர்காலத்தில் சம்பள முரண்பாடுகளை நீக்குவதில் தொடர்ந்து பணியாற்றுவோம். அது குறித்து மேலும் விவாதங்கள் நடந்து வருகின்றன.

அதேபோல், கல்விக் கட்டமைப்பில் சிக்கல் இருப்பதை நாம் அனைவரும் ஒப்புக்கொள்கிறோம். அதை  சரிசெய்ய வேண்டும். அதை உடனடியாகச் செய்ய முடியாது. இது ஒரு செயல்முறை. அரசாங்கத்தின் தலையீடு மட்டும் போதாது. அமைப்பை மாற்றுவதற்கு, நமக்குள்ளும் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும். அமைப்பு என்பது நாம்தான். நாம் மாறினால், அமைப்பு தானாகவே மாறும். அதற்காக, கல்வி பேரவையொன்றை உருவாக்குவோம்.” என்றார்.

Related posts

முஸ்லிம்கள் என்றால் எவ்வளவு அடித்தாலும் ஐ.தே.கட்சி தான் என்ற நிலையை மாற்ற வேண்டும்

wpengine

18 வீதமான நிதியினை மட்டும் செலவு செய்ய வடமாகாண சபை! கல்வி சமுகம் விசனம்

wpengine

வடக்கு,கிழக்கு இணைப்பு! கிழக்கு முஸ்லிம்களின் இணக்கப்பாட்டுடன்தான் ஹக்கீம்

wpengine