பிரதான செய்திகள்

நாட்டின் தேசிய பாதுகாப்பை சீரழிக்கும் செயற்பாட்டிற்கு அரசாங்கம் இடமளிக்காது

போர்க் குற்றங்கள் என்ற பெயரில் இராணுவத்தின் மீதான பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்காக எக்காரணத்தை கொண்டும் முறையான விசாரணைகளை மேற்கொள்ளாது எமது இராணுவத்தை கைதுசெய்ய முடியாது. நாம் உள்ளக விசாரணை பொறிமுறைகளை கையாண்டு உண்மைகளை கண்டறிந்து வருகின்றோம். அதற்கமையவே இராணுவத்தின் மீதான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார். 

நாட்டின் தேசிய பாதுகாப்பை சீரழிக்கும் வகையிலோ அல்லது நாட்டில் பிளவு ஏற்படுத்தும் வகையிலோ எவரது செயற்பாட்டிற்கும் அரசாங்கம் இடமளிக்காது.

ஐக்கிய இலங்கைக்குள் தீர்வை பெற்றுத்தருவதே நல்லாட்சி அரசாங்கதின் நோக்கமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கு கிழக்கு தனித்து பிராந்தியம் அமையவேண்டும் என வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அண்மையில் தெரிவித்திருந்த நிலையில் அது தொடர்பிலும் இராணுவம் மீதான போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பிலான கருத்துக்கு பதிலளிக்கையில் அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Related posts

சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் லதீப்க்கு பதவி வழங்கப்படவில்லை.

wpengine

பாலமுனையில் வாங்கிகட்டிய அமைச்சர் ஹக்கீம்.

wpengine

அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிரான தீர்மானம் அரசியல் கோணம்

wpengine