பிரதான செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதியை நிர்ணயிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிம்

“எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதிக்கும் மே மாதம் 4ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியும்.”
இவ்வாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.


நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதியை நிர்ணயிக்கும் அதிகாரம் அரசமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியிடம் காணப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.


தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,


“ஏனைய தேர்தல்களுக்கான திகதியை நியமிப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் காணப்படுகின்ற போதிலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதியை நிர்ணயிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடமே தங்கியுள்ளது.


சித்திரைப் புதுவருடப்பிறப்பு மற்றும் வெசாக் பூரணை தினம் ஆகியன வருவதால் பாரிய சிரமங்களுக்கு மத்தியில் தேர்தலை நடத்தவேண்டி ஏற்படும்.


இந்தக் காலப்பகுதியில் அரச உத்தியோகத்தர்களுக்கு விடுமுறை அதிகமாகக் காணப்படுவதாலேயே பாரிய சிரம நிலை ஏற்படும்” – என்றார்.

Related posts

சமுர்த்தி பணத்தை கொள்ளையடிக்க ஐ.தே.க.முயற்சி

wpengine

பொது பாதுகாப்பு அமைச்சர் பதவியை ஏற்கத் தயார் – பொன்சேகா

Maash

மன்னார் மக்களை ஏமாற்றும் நகை கடை உரிமையாளர்கள்

wpengine