பிரதான செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு! சரத் பொன்சேகாவும் பங்கேற்பு!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விசேட செயலமர்வு ஒன்று இன்று நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நடைபெற்றுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த செயலமர்வுக்குத் தலைமை தாங்கியுள்ளார். இதில் அனைத்து கட்சிகளையும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களான பியோனா மெத்டகர்ட், ரிச்சர்ட் பேகன் ஆகியோர் கலந்து கொண்டு நாடாளுமன்ற சம்பிரதாயங்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்புகள் குறித்து விளக்கவுரை ஆற்றியுள்ளனர்.சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் ஆகியோரும் இதன்போது சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளனர்.

ஜனநாயக் கட்சியின் தலைவரும் முன்னாள் ராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகாவும் முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வில் இன்று கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

வடக்கு மீள்குடியேற்றச் செயலணியை நிராகரிக்கும் எந்த யோக்கியதையும் விக்கி ஐயாவுக்குக் கிடையாது! சுபியான் குற்றச்சாட்டு

wpengine

யோகட் நிலையத்தை திறந்து வைத்த அமீர் அலி

wpengine

திருமதி லதா மங்கேஷ்கரின் மறைவையிட்டு மிகவும் வருந்துகின்றேன்-கோத்தா

wpengine