பிரதான செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீயானி வெளியேற்றம்! அபேகுணவர்தன மருத்துவமனையில்

மகிந்த அணியினரால் நேற்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியின்போது காயமடைந்த
நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை
பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது காயமடைந்த மற்றும் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீயானி விஜேவிக்ரம நேற்று
இரவு மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளதாக மருத்தவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெட் வரி அதிகரிப்பு உள்ளிட்ட சில காரணங்களை முன் நிறுத்தி கொழும்பு லேக்ஹவுஸ்
சுற்றுவட்டத்தில் நேற்று மகிந்த அணியினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது வீதியில் காவல்துறையினரால் வைக்கப்பட்டிருந்த இரும்புச் சட்டங்களை தள்ளி விழுத்திய சம்பவத்தில் இவர்கள் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தேசியக் கொடியை அகற்றி, கருப்புக் கொடியை ஏற்றிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள்.!

Maash

இன,மதவாத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த 25 பேர் கொண்ட குழு

wpengine

வவுனியாவில் கடத்தல் சம்பவம்! ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் வடமாகாண அமைப்பாளர்

wpengine