செய்திகள்பிரதான செய்திகள்யாழ்ப்பாணம்

நாகப்பாம்பை கைகளால் பிடித்த குருக்களை பாம்பு தீண்டியதால் மரணம் . .!

குருக்கள் ஒருவர் நாக பாம்பினை கைகளால் பிடித்தபோது அந்த பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார். இதன்போது புத்தூர், சிவன்கோவில் வீதியை சேர்ந்த கணேசக்குருக்கள் கௌரிதாசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த குருக்கள் அராலி பகுதியில் உள்ள வாலையம்மன் கோவிலில் பூஜை செய்து வந்துள்ளார். கடந்த 31ஆம் திகதி இரவு பூஜையை முடித்துவிட்டு கோவிலுக்கு அருகேயுள்ள வீட்டிற்கு சென்று முற்றத்தில் இருந்துள்ளார். இதன்போது அங்கு வலையில் சிக்கியிருந்த நாகபாம்பை கைகளால் பிடித்துள்ளார். இதன்போது பாம்பு அவரை தீண்டியது.

இந்நிலையில் வீட்டில் உள்ளவர்களை அழைத்து போத்தல் ஒன்றினை வாங்கி பாம்பினை போத்தலினுள்ளே விட்டுவிட்டு, தன்னை பாம்பு தீண்டிய விடயத்தை கூறிவிட்டு அதன் விசத்தை இல்லாது செய்யவும் தனக்கு தெரியும் என கூறியுள்ளார்.

இருப்பினும் அவர்களின் வற்புறுத்தலினால் 1ஆம் திகதி அதிகாலை 1 மணியளவில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

Related posts

இருப்புக்களுக்கான இரட்டைச்சவால்கள்!!!

wpengine

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு..!

Maash

அதிகாரிகள் கவனம் செலுத்த தவறினால் ஜனாதிபதிக்கு 1919 ற்கு அழையுங்கள்!

wpengine