பிரதான செய்திகள்

நஷீர் அஹமட் தடை நீக்கம்

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஷீர் அஹமட், முப்படை தளங்களுக்குள் பிரவேசிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை பாதுகாப்பு அமைச்சு நீக்கியுள்ளது.

இது தொடர்பில் இராணுவ பேச்சாளர் ஜயநாத் ஜயவீர குறிப்பிடுகையில், கிழக்கு மாகாண முதலமைச்சர் முப்படை தளங்களுக்குள் இனி பிரவேசிக்க முடியும்.

மேலும் கிழக்கு மாகாண முதலமைச்சர் கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் முப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்போவதில்லை என்ற முடிவினையும்  திரும்ப பெற்றுக்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

சம்பூர் மகா வித்தியாலயத்தில் வைத்து கடற்படை அதிகாரி ஒருவரிடம் தரக்குறைவாக நடந்துக்கொண்ட காரணத்தால் பாதுகாப்பு அமைச்சு கிழக்கு மாகாண முதலமைச்சர்  நஷீர் அஹமட்டிற்கு இந்த தடைகளை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தாக்கப்பட்ட சாய்ந்தமருது! பாதுகாப்பு கடமையில் பொலிஸ்

wpengine

கிராமத்துடன் உரையாடல்” குருனாகல் பகுதிக்கு சென்ற கோத்தா

wpengine

அரசாங்கம் மன்னார் உள்ளுராட்சி மன்றங்கள் கைப்பற்றுமாக இருந்தால் ,மன்னாரை காப்பாற்ற முடியாது.

Maash