பிரதான செய்திகள்

நவகமுவ பிக்கு விவகாரம் – 8 பேரின் விளக்கமறியல் மேலும் நீடிப்பு!

நவகமுவ மொமிரி ராஸ்ஸபான பிரதேசத்தில் விகாரையின் பெயரில் நடத்தப்பட்ட வீட்டுக்குள், பிக்கு,யுவதி மற்றும் இரு பெண்களை நிர்வாணப்படுத்தி தாக்குதல் நடத்தினர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலிில் வைக்கப்பட்டுள்ள எட்டுப்பேரின் விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் எட்டுப்பேரும் கடுவளை நீதவான் நீதிமன்றத்தில் புதன்கிழமை (12) ஆஜர்படுத்தப்பட்டனர் அதன்போதே நீதவான் ஷாமினிமா விஜேபண்டார மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.

அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், சந்தேகநபர்கள் எட்டுப்பேரில் எழுவரை சாட்சியாளர்கள் இருவர் அடையாளம் கண்டுப்பிடித்தனர். ஒரு சாட்சியாளை எவரும் அடையாளம் காட்டவில்லை.

இந்நிலையில் முறைப்பாட்டார்கள் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி, சம்பவம் தொடர்பில் இன்னும் பல சந்தேகநபர்கள் கைது செய்யப்படவேண்டி உள்ளனர்.

ஆகையால், அதுதொடர்பில் பொலிஸாருக்கு அறிவுறுத்துமாறும், சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கவேண்டாம் என்றும் நீதிமன்றிடம் கேட்டுக்கொண்டார்.

Related posts

உலகில் இஸ்லாமிய கிலாபத்துக்கு தடையாகவும், மத்திய கிழக்கை கொலைக்களமாகவும் உருவாக்கியவர்கள் யார் ?

wpengine

அதியுயர்பீடத்தில் நோயாளிகளைத்தவிர ஆரோக்கியமானவர்கள் உள்ளார்களா ?

wpengine

ரணில்-பசில் இரகசிய சந்திப்பு! பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட பேச்சாளர்

wpengine