பிரதான செய்திகள்

நல்லாட்சியில் உல்லாசமாக வாழும் முன்னால் அமைச்சர்கள்

முக்கியமான செய்தி ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கூற வேண்டும் என அவசரமாக லண்டன் சென்ற முன்னாள் அமைச்சர்கள் டிலான் பெரேரா, சந்திம வீரக்கொடி ஆகியோர், இதுவரை ஜனாதிபதியை சந்திக்கவில்லையென தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்தில் கல்வி பயிலும் தனது புதல்வரை காண சந்திம வீரக்கொடி லண்டன் சென்றுள்ளதுடன், டிலான் பெரேரா தனது மனைவியின் நலன் அறிய அங்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

லண்டன் சென்ற முன்னாள் அமைச்சர்கள் இருவரும் அங்கு நடந்த விருந்துபசாரம் ஒன்றிலும் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விருந்தின் போது எடுத்துக் கொண்ட படங்கள் இணையத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

எவ்வாறாயினும் சந்திம வீரக்கொடியும் டிலான் பெரேராவும் இன்று ஜனாதிபதியை சந்திப்பார்கள் என தகவல்கள் கூறுகின்றன.

Related posts

ஹஸன் அலி விவகாரம் தொடர்பில் ஆராய்ந்து நியாயம் வழங்க குழுவை நியமிக்க தீர்மானம்!

wpengine

சம்பிக்க ரணவக்கவின் வாயாலேயே உண்மை வெளிப்பட்டது!

wpengine

பசறையில் விபத்து! 13 பேர் மரணம் 30க்கு மேல் படுகாயம்

wpengine