பிரதான செய்திகள்

நல்லாட்சியின் பின்னால் இருந்து கொண்டு தவறு செய்ய இடமளிக்கப்படாது!

நல்லாட்சிக்கான அடையாளத்தின் பின்னால் இருந்து கொண்டு எவருக்கும் தவறு செய்ய இடமளிக்கப் போவதில்லை என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அனைவரும் தமது மனசாட்சிக்கு அமைய செயற்படாவிடில், நல்லாட்சி மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை சிதைந்துவிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், நல்லாட்சி மற்றும் நல்லிணக்க கருத்துக்களை வெற்றி கொண்ட நாடு, மக்களை வென்றெடுக்க அனைத்து அர்ப்பணிப்புக்களையும் செய்ய வேண்டியது அனைவரினதும் கடமை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஆசாத் சாலிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் விரைவில்

wpengine

100 மீற்றர் ஒட்டத்தில் தோல்வி அடைந்த உசேன் போல்ட்! ஒய்வு பெறுகின்றார்

wpengine

“பரீட்சாத்திகளின் இலக்குகள் ஈடேற பெற்றோருடன் சேர்ந்து நானும் பிரார்த்திக்கிறேன்” – ரிஷாட்!

wpengine