பிரதான செய்திகள்

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினர் கருணா

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாநகர சபையில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) வெற்றியீட்டியுள்ள ஒரு ஆசனத்துக்கான உறுப்பினரை சுழற்சி முறையில் அனுப்புவதற்கு கட்சியின் தலைமைத்துவ சபை தீர்மானித்துள்ளது – என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் நஜா முஹம்மத் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், இவ்வாறு சுழற்சி முறையில் உறுப்பினர்களை அனுப்பும்போது நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கு கொழும்பு மநாகர சபையில் அதிக வாக்குகளைப் பெற்றுக்கொடுத்த வேட்பாளர்கள் கவனத்திற் கொள்ளப்படவுள்ளனர்.

அத்தோடு, கொழும்பு மாநகர சபையில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியோடு இணைந்து போட்டியிட்ட நவ சம சமாஜக் கட்சியின் செயலாளர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவுக்கும் இந்த சுழற்சி முறையின்போது ஒரு வாய்ப்பை வங்குவதற்கு தலைமைத்துவ சபை தீர்மானித்துள்ளது. – என்றும் தெரிவித்தார்.

Related posts

வடிகானினை சரியான முறையில் அமைப்பதற்கு பொறியியலாளர் ஷிப்லி பாறுக் ஆலோசனை

wpengine

இலங்கை வீரர் வனிந்து ஹசன்ரங்க 10.75 கோடி ரூபாவுக்கு ஏலம்.

wpengine

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர்கள் சஜித் அணியில்

wpengine