பிரதான செய்திகள்

நல்லாட்சி அரசு பலஸ்தீன முஸ்லிம்களையும்,இலங்கை முஸ்லிம்களையும் ஏமாற்றுகின்றது.

மஸ்ஜிதுல் அக்ஸா இமாமுக்கு பெடிசையும்,கஞ்சிக்கோப்பையையும் கொடுத்துபலஸ்தீன் மக்களையும் இலங்கைமுஸ்லீம்களையும் நல்லாட்சி அரசு ஏமாற்றமேற்கொண்டுள்ள மியற்சியானது மிகவும்வெட்கக்கேடான செயல் என பாணந்துறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர்இபாஸ் நபுஹான் குறிப்பிட்டார்.

அவரது ஊடகப்பிரிவு அனுப்பிவைத்துள்ளஅறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது..

நேற்று அலறி மாளிகையில் இடம்பெறஜனாதிபதியின் இப்தாரில் கலந்துகொள்ளமஸ்ஜிதுல் அக்ஸா இமாம் என்று ஒருவரைபலஸ்தீனத்துக்கான  இலங்கை தூதுவர்பவ்சான் அன்வர் அழைத்து வந்துள்ளார்.

மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சி காலத்திலும் சரிஅதற்கு முன்னரும் சரி இஸ்ரேலுக்குமூடப்பட்டிருந்த இலங்கை கதவை திறந்துவிட்ட இந்த நல்லாட்சி அரசு அண்மையில்இடம்பெற்ற இஸ்ரேலுக்கு எதிரான நாவாக்கெடுப்பில் கலாந்துகொள்ளாமல் முதுகெழும்பு இல்லாமல் ஒழிந்துகொண்டுபலஸ்தீன அப்பாவி மக்களுக்கு மாத்திரம்அன்றி இலங்கை முஸ்லிம்களுக்கும் பாரியதுரோகம் இழைத்துவிட்டது.

அது மாத்திரம் அல்லாமல் இஸ்ரேல்சிறையில் வாடும் பலஸ்தீனர்களின்விடுதலைக்காக இலங்கையில் உள்ள பலஸ்தீன் தூதரகத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த றாஜபச்க்‌ஷ முந்தியடித்து சென்று கையெப்பம் இட நல்லாட்சி ஜனாதிபதிக்கும்  பிரதமருக்கும்அதற்காக நேரம் இருக்கவில்லை.

இப்படியாக எல்லா விடயங்களிலும்பலஸ்தீன மக்களை ஏமாற்றி வரும் நல்லாட்சிஅரசு இலங்கை முஸ்லிம்களை பலஸ்தீன இமாமை அழைத்து வந்து ஏமாற்ற முனைந்துள்ளது மிகவும் வெட்கக்கேடான செயலாகும்.

இலங்கை முஸ்லிம் விவகாரத்தை சர்வதேசம்வரை எடுத்து செல்லப்படுவதின் ஊடாகவேஎமக்கு தீர்வை பெற்றுக்குகொள்ள முடியும்கூறுபவர்கள் இந்த நிகழ்வு மூலம் இலங்கைமுஸ்லிம்  பிரச்சினை சர்தேசமயப்படுத்தப்படவில்லை என்பதைசான்றுபகர்கிறது.

முஸ்லிம் நாடுகளில் இலங்கை முஸ்லிம்பிரச்சினைகளை கொண்டுபோய் அரசுக்குஅழுத்த கொடுக்க வேண்டிய பவ்சான்அன்வர் போன்றவர்கள் சமூகத்தை மறந்துநல்லாட்சிக்கு தரகர் வேலை பார்த்துள்ளதுகவலையளிக்கிறது.

பலஸ்தீன மக்களுக்காக வாக்களிக்காமல்ஓடி ஒழிந்து விட்டு பலஸ்தீன் ஆதரவுகொடியை தோழில் சுமக்க ஜனாதிபதிக்குவெட்கம் இல்லையா என தான் கேட்கவிரும்புவதாக இபாஸ் நபுஹான் அவர்களின்ஊடக பிரிவு அனுப்பியுள்ள செய்தியில்குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

பொதுமக்களிடம் பொலிஸார் முன்வைத்துள்ள முக்கிய வேண்டுகோள்!

Editor

ஒரு லச்சம் பேருக்கு விரைவில் வாழ்வாதாரம் மன்னாரில் அமைச்சர் றிஷாட்

wpengine

“நீர்ப்பாசன செழுமை” வேலைத்திட்டம் திறந்து வைத்த மன்னார் அரசாங்க அதிபர்.

wpengine