பிரதான செய்திகள்

நத்தார், புதுவருட பண்டிகைக்கால கடை மன்னாரில்

எதிர்வரும் நத்தார், புதுவருட பண்டிகைக்காலத்தின் வியாபாரங்களை மேற்கொள்ள மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் சுமார் 300 இற்கும் அதிகமான தற்காலிக வியாபார நிலையங்கள் அமைக்க வியாபாரிகளுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் இன்று முதல் பண்டிகைக்கால வியாபாரங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு வருடமும் பண்டிகைக்கால வியாபாரங்களை மேற்கொள்ள உள்ளூர் மற்றும் வெளிமாவட்ட வர்த்தகர்களின் கேள்வி கோரலின் அடிப்படையில் இடம் வழங்கப்படுவது வழமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த இடங்களில் வர்த்தகர்கள் வியாபார நிலையங்களை அமைத்து பண்டிகைக்கால வியாபாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், மக்கள் பண்டிகை காலத்திற்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அரசின் அடக்குமுறைகளையும் அழுத்தங்களையும் தாங்கிகொள்ள முடியாது

wpengine

சிறை செல்லவுள்ள கரு ஜயசூரிய

wpengine

சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள்கள், மருந்துகள் ,அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொள்வனவு இந்தியா கடன்

wpengine