செய்திகள்பிரதான செய்திகள்

நண்பருடன் நேற்று மாலை வேளையில் மீன்பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு .

நேற்று (31) நெய்னாகாடு சாவாற்றில் மீன் பிடிக்கச் சென்றவர் இன்று (01) பிற்பகல் வேளையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு மீட்கப்பட்டவர் செல்லப்பா வீதி, பாண்டிருப்பு 01 ஏ பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் செல்லராசா வெற்றி வேல் ( பெரிய தம்பி) ஆவார். இதனை உறவினர்கள் உறுதி செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, அம்பாறை – இறக்காமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நெய்னாகாடு சாவாறு பகுதியில் நண்பருடன் நேற்று மாலை வேளையில் மீன்பிடிக்கச் சென்றவர் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் தனது கணவரைக் காணவில்லை என மனைவி இன்று காலை இறக்காமம் பொலிஸில் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார்.

குறித்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த மீனவரின் நண்பரிடம் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, காணாமல் போனவர் பிற்பகல் 3.00 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்டவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

வீதியில், இறங்கி மக்களை அழைத்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் செய்தால் வானத்தில் இருந்து டொலர் கொட்டாது.

wpengine

ஒரே நாளில் மூன்று வயது முதல் 35 வயதுக்கு இடைப்பட்ட 7 பேர் நாய் கடிக்கு உள்ளாகி வைத்தியசாலையில் .

Maash

ஹிஸ்புல்லாஹ் கட்டிக்கொடுத்த நகர சபை கட்டடத்தை ஹாபீஸ் திறக்க திட்டம்! ஹிஸ்புல்லாஹ் காட்டம்

wpengine