பிரதான செய்திகள்

தோப்பூரில் பள்ளியினுள் ஒருவர் வெட்டிக் கொலை!

மூதூர் பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட தோப்பூர் ஆஸாத் நகர் மீரா தைக்காப் பள்­ளி­வா­ச­லினுள் வைத்து நபர் ஒருவர் வெட்டிக் கொலை செய்­யப்­பட்ட சம்­பவம் ஒன்று  இடம்­பெற்­றது. 


இச் சம்­ப­வத்தில் பலி­யான நபர் அச் சமயம் நோன்பு நோற்­றி­ருந்தார் என்றும் பள்­ளி­வா­சலில் சுபஹ் தொழு­கையை நிறை­வேற்றி விட்டு மசூ­ராவில் இருந்த போதே இந்தச் சம்­பவம் இடம்­பெற்­றுள்­ள­தா­கவும் தெரிய வரு­கி­றது.

பள்­ளி­வா­ச­லுக்குள் நுழைந்த மூவர் கொண்ட குழு­வி­னரே இவரை வெட்டிக் கொலை செய்­துள்­ளதாக முதற் கட்ட விசா­ர­ணை­களில் தெரிய வந்­துள்­ளது.

காலை 6.00 மணி­ய­ளவில் இடம் பெற்­றுள்ள.இச்­சம்­ப­வத்தில் உயிர் இழந்­தவர் கே.எம்.நாஸ்கீன் (வயது 39) என இனங்­கா­ணப்­பட்­டுள்ளார்.

இச் சம்­ப­வத்தில் உயிர் இழந்த நபர் அவ­ரது மைத்­து­னரை கட்டுத் துவக்­கினால் சுட்டு கொலை செய்த குற்­றச்­சாட்டின் பேரில் மூதூர் பொலி­ஸா­ரினால் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்டு மூன்று மாதத்­திற்கு முன்னர் பிணையில் விடு­தலை செய்­யப்­பட்­டவர் எனத் தெரிய வரு­கி­றது.

இதன் பின்­ன­ணி­யி­லேயே இக் கொலைச் சம்­ப­வமும் இடம் பெற்­றி­ருக்­கலாம் எனச் சந்­தே­கிக்­கப்­ப­டு­கி­றது.

இச் சம்­ப­வத்தில் உயி­ரி­ழந்­த­வரின் மைத்­துனர் உட்­பட மூன்று நபர்­களை மூதூர் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பயங்கரவாதிகளுடன் முஸ்லிம் மக்களை ஒப்பிடக் கூடாது அமைச்சர் கபீர்

wpengine

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சற்றுமுன்னர் நாட்டை வந்தடைந்துள்ளார்.

Maash

இன்டர்நெட் இல்லாமல் Whatsapp பயன்படுத்தலாமா?

wpengine