பிரதான செய்திகள்

தொழிற்சங்கங்கள் அரசியலுடன் இணையாமல் சுதந்திரமாக செயற்பட வேண்டும்.

தொழிற்சங்க இயக்கத்தை ஒழுங்குபடுத்தும் வேலைத்திட்டமொன்றை செயற்படுத்த வேண்டும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

தொழிற்சங்கங்களில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காக தொழிற்சங்க கட்டளைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட ​வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

தம்புள்ளை தொழிலாளர் அலுவலக கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

ஏனெனில் இந்த நாட்டில் மொத்த தொழிலாளர்களில் 35 சதவீதமானவர்கள் பெண்களாவர். மற்றைய விடயம்தான் இந்த தொழிற்சங்கங்கள் அரசியலுடன் இணையாமல் சுதந்திரமாக செயற்பட வேண்டும். இல்லையென்றால் தீர்க்கமுடியாத பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

Related posts

நுரைச்சோலை வீட்டுத்திட்டம், அமைச்சர் ரிஷாட்டின் பத்திரம் தொடர்பில் அடுத்த வாரம் தீர்மானம்

wpengine

சாணக்கியன்-சுமந்திரன் எம்.பிக்களின் பசப்பு வார்த்தைகளை நம்பி மக்கள் ஏமாந்து விடக்கூடாது.

wpengine

அமைச்சு தந்தால் குண்டர்களை முற்றாக அடக்கிக் காட்ட முடியும்.

wpengine