பிரதான செய்திகள்

தொலைபேசி கட்டண உயர்வு! கொழும்பில் கையெழுத்து வேட்டை

வட் வரி அதிகரிப்பு மற்றும் தொலைபேசி கட்டண உயர்விற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பொதுமக்களின் கையெழுத்தினை பெற்றுக்கொள்ளும் செயற்றிட்டம் ஒன்றை சோசலிச இளைஞர் சங்கத்தினர் முன்னெடுத்திருந்தனர்.

கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று கையெழுத்து சேகரிக்கும் நிகழ்வு இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

வட் வரியின் உயர்வுக்கும், தொலைபேசி கட்டண உயர்விற்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் பதாதைகளை காட்சிப்படுத்தியவாறு போராட்டம் இடம் பெற்றது.

மேலும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை விளக்கும் வகையிலான வீதி நாடகங்களும் கையெழுத்து போரட்டத்திற்கு வலுச் சேர்த்தமை குறிப்பிடத்தக்கது.

“தொலைப்பேசி மற்றும் இணையக் கட்டணங்களின் மீது திணிக்கப்பட்ட அநியாயமான வரியைஉடன் நீக்கு” என்ற வரிகளைக் கொண்ட பதாதை மீது கையொப்பங்கள் பெறப்பட்டன

Related posts

வவுனியா பாரதி முன் மாதிரித்தோட்டம் பயனாளிகளிடம் கையளிக்கப்படவுள்ளது.

wpengine

மொட்டுக்கட்சியில் முரண்பாடு! மைத்திரி,விமல் இரகசிய சந்திப்பு

wpengine

தொழில் இழந்தவர்களுக்கு மீண்டும் தொழில்வாய்ப்பு!

Editor