பிரதான செய்திகள்

தை பொங்கல் வாழ்த்து தெரிவித்த அங்கஜன் ராமநாதன் (பா.உ)

உலக உழவர்களுக்கு உயிரூட்டிய கதிரவனுக்கு தை பொங்கல் திருநாளில் அனைவரும் இணைந்து நன்றி செலுத்தும் பொன் நாளில்,படைத்தவனுக்கு அறுவடையாக புதிதாய் நாம் பெற்றதை சூரிய பகவானுக்கு உவந்தமுதளிக்கும் திருநாளாகிய தைத்திருநாளில் எல்லோரும் மகிழ்ச்சி பொங்க,இவ் புதிய ஆண்டையும் வரவேற்று பரஸ்பர புரிந்துணர்வோடு, நாம் இவ் வையகத்தில் பெற்றவற்றை அனைவரும் சமத்துவமான வகையில் பெற்றிட மகிழ்வுடன் அதன் சுவையை தித்திக்கும் பொங்கலாக வழங்குவோம்.

ஏர்பூட்டி உணவளிக்கும் உழவர்களை போன்று, விவசாய பெருமக்களை போல் சிறந்த விதைகளை விதைத்து,நாட்டு மக்களுக்காக அறுவடைகளை எதிர்பார்த்து, காத்திருக்கும் உங்களில் நானும் ஒருவன்.

நாட்டு மக்கள் அனைவரும் எமது தன்னிறைவுக்காக தளராது,அனைவரும் கைகோர்த்து உழைத்திடும் இவ் பொன்னான திருநாளில் மகிழ்ச்சி பொங்க எனது வாழ்த்துக்களையும் வழங்குவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

எமது ஆரம்ப மகிழ்ச்சியும் நிலையான மாற்றத்திற்கு வித்திடட்டும்.
நமது பாரம்பரியமான வரலாற்றில் வரவேற்றல்,விருந்தோம்பல்,நன்றி செலுத்துதல்.அவற்றை நீண்டநெடுங்காலமாக நாம் அனைவரும் பின்பற்றி வருகின்றோம்.

நமது பாரம்பரியங்கள்,இதிகாசங்கள்,வரலாறுகளில் இருந்து பல்லின,மற்றும் பன்மைத்துவ அடையாளங்களை நவீனயுக சந்ததியினர் கடைப்பிடித்து கொள்ள கூடிய வகையில் கலாச்சார நிகழ்வுகளின் ஊடாக கூட்டு பரிமாணங்களை ஏற்ப்படுத்தி அவற்றை நாம் அடைந்து கொள்ள எமது நடைமுறை செயற்பாடுகள் அமைய வேண்டும்.

மறை எண்ணங்களாக அன்றி, ஒளி கதிர்கள் இந் நன்நாளில் இருந்து பரந்தளவில் பரவட்டும்.நமது எண்ணங்கள் சுவை பெறட்டும்.

Related posts

திருமலையில் இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி மரணம்!

Editor

சஹ்ரானுடன் தொடர்பு! புத்தளம் மத்ராஸாவில் இருவர் கைது

wpengine

முஸ்லிம் வழிபாட்டுத் தலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி தொடர்பில் மீள் பரிசீலனை

wpengine