அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

தேர்தல் தொடர்பில் இதுவரை 398 முறைப்பாடுகள், 30 வேட்பாளர்கள் கைது.

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை (மார்ச் மாதம் 03 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி) 398 முறைப்பாடுகள்கிடைத்துள்ளதுடன் , 30 வேட்பாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 313 முறைப்பாடுகளும் தேர்தலுடன் தொடர்புடைய ஏனைய குற்றங்கள் தொடர்பில் 85 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.

இந்நிலையில், தேர்தல் சட்டங்களை மீறியமை மற்றும் தேர்தலுடன் தொடர்புடைய  ஏனைய குற்றங்கள் தொடர்பில் 30 வேட்பாளர்களும் 131 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தேர்தல் நடவடிக்கைகளுக்காக சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்ட 31 வாகனங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.  

Related posts

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவராக செந்தில் தொண்டமான்

wpengine

தலைமன்னார் வைத்தியர்களின் அசமந்த போக்கு! மக்கள் அசௌகரியம்

wpengine

வெசாக் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் 7 கைதிகள் விடுதலை !

Maash