பிரதான செய்திகள்

தேர்தல் கால அரசியல்வாதி நான்அல்ல ஷிப்லி

(எம்.ரீ. ஹைதர் அலி)
மட்டக்களப்பு மாவட்டத்தின், வாகரை, கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் மாங்கேணி தெற்கு 211G, கிராம சேவையாளர் பிரிவிலுள்ள காரமுனை மீள்குடியேற்ற கிராமத்திற்கு இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,மாண்புமிகு பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க ஆகியோரது வழிகாட்டலில் காரமுனை முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாயல் நிருவாக சபையின் வேண்டுகோளுக்கிணங்க கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் கௌரவ. M. ஷிப்லி பாறுக் அவர்களின் முயற்சியினால் கிழக்கு மாகாண முதலமைச்சர் பொறியியலாளர் கௌரவ. Z.A. நஸீர் அஹமட் அவர்களின் பூரண ஒத்துழைப்புடன் மின்சார இணைப்புக்கான வேலைகள் முன்னெடுக்கப்பட்டு 2016.09.02ஆந்திகதி (வெள்ளிக்கிழமை) மின்சார இணைப்பு வழங்கப்பட்டு மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

மின்சார வசதி அங்கு குடியிருக்கும் மக்களின் பெரும் எதிர்பார்ப்பாகவும், பல வருட கோரிக்கையாகவும் இருந்த கட்டாயத்தேவையினை நிவர்த்தி செய்து மின் இணைப்பினை பெற்றுக்கொடுத்த இம்முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வானது காரமுனை முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாயல் தலைவர் K.L.M. அஸனார் அவர்களின் தலைமையில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் பொறியியலாளர் கௌரவ. Z.A. நஸீர் அஹமட், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் M. ஷிப்லி பாறுக் ஆகியோர் கலந்துகொண்டு கல்லினை திரை நீக்கம் செய்து வைத்தனர்.

இந்நிகழ்வில் தலைமை உரையாற்றிய பள்ளிவாயல் நிருவாக சபையின் செயலாளர் S. நளீம் அவர்கள்…
இத்தருணத்தில் நாம் அனைவரும் மறக்க முடியாத அளவுக்கு எமது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ. ஷிப்லி பாறுக் அவர்கள் திகழ்கின்றார்கள். அத்தோடு அவருக்கு என்னுடைய தனிப்பட்ட நன்றியினையும் கூறிக்கொள்கின்றேன்.

இக்கராமுனை கிராமத்திற்கு என்ன குறைபாடு இருக்கின்றது என்று கேட்டறிந்து தொடர்ந்து பல வழிகளில் பல தேவைகளுக்காக அடைவுகளை பெறுவதில் எமக்கு தோழோடுதோழ் நின்று உழைத்து வருகின்றார்கள். அவருடைய பங்களிப்பு எமது கிராமத்திற்கு தொடர்ந்து கிடைக்குமென்று நாங்கள் நம்புகின்றோம். அத்தோடு அவருடைய முயற்சியின் பயனாக இன்று எங்கள் காரமுனை கிராமத்திற்கு மின்சார இணைப்பு கிடைத்துள்ளது.

அத்தோடு, இக்கிராமத்தில் அடிப்படை தேவைப்பாடுகளாக காணப்படும் வீடு, மலசலகூட வசதி மற்றும் போக்குவரத்திற்கான வீதி போன்ற குறைபாடுகளை எதிர்காலத்தில் எங்களுடைய முதமைச்சர் அவர்கள் நிவர்த்தி செய்துதரவேண்டுமென்றும், எமது காரமுனை கிராமத்திற்கு ஆழங்குளம் வழியாக செல்லும் வீதி மிகவும் மக்கள் பயன்பாட்டிற்கு அற்ற நிலையிலும் மழைக்காலங்களில் வெள்ளத்தினால் இவ்வீதி முழ்குவதாலும், இப்பிரதேசத்தில் வசிக்கும் ஆலங்குளம் மற்றும் காரமுனை மக்கள் பெரிதும் சிரமப்படுவதாகவும். இவ்வீதிக்கு மாற்றீடாக காணப்படும் நாவலடி-கொழும்பு பிரதான வீதியில் காணப்படும் காரமுனை கிராமத்திற்கு வரும் வீதியில் யானைகளின் அட்டகாசங்களினால் பொதுமக்கள் பயணிக்க முடியாத வகையிலும் யானைகளின் அட்டகாசங்களினால் பல உயிர்களும் இவ்வீதியில் காவுகொள்ளப்பட்டுள்ளது என்பதனையும் இங்கு வருகை தந்துள்ள முதலமைச்சருக்கு தெரியப்படுத்துவதோடு, இவ்வீதிகளை புனர்நிர்மாணம் செய்து தருமாறும் கேட்டுக்கொள்வதாக தனதுரையில் பள்ளிவாயல் நிருவாக சபையின் செயலாளர் கேட்டுக்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து உரையாற்றிய பொறியியலாளர் ஷிப்லி பாறுக்…

இவ்வாறான நிகழ்வுகள் நாங்கள் நடைபெறுமா என்று ஒரு காலகட்டத்தில் யோசித்துக்கொண்டிருந்த நிலையில் அல்லாஹ்வின் உதவியால் இவ்வாறான விடயங்களை சாதிப்பதற்குரிய சந்தர்ப்பங்களை அல்லாஹ் எங்களுக்கு தந்துள்ளான். உண்மையில் இவ்வாறான திட்டங்களை நாங்கள் முன்கொண்டு செல்லுகின்றபோது எங்களுக்கு கூடியளவு பக்கபலமாக இருக்கின்ற ஒருவாராக எமது மாகாணத்தினுடைய முதலமைச்சர் காணப்படுகின்றார்.

நாங்கள் இவ்வாறான கிராமங்களின் அபிவிருத்திக்காக மின்சாரம் சார்ந்த விடயங்களை முன்னெடுத்து செல்லுகின்றபோது உண்மையில் எங்களுடைய அரசியல் அதிகாரங்கள் சிறியளவாக இருந்தாலும் அதனை வைத்துக்கொண்டு எங்களுடைய முதலமைச்சரின் உதவியுடன் இவ்வாறான விடயங்களை முன்னெடுத்து செல்லுகின்றோம்.

இன்னும் பாரியளவிலான அபிவிருத்தி திட்டங்களை இக்கல்குடா பிரதேசத்தில் மேற்கொள்வதற்கு திட்டங்களை வகுத்து அதற்குரிய முன்னெடுப்புக்களை மேற்கொண்டிருக்கின்றோம். எனக்கு முன் உரையாற்றிய இப்பள்ளிவாயலின் செயலாளர் அவர்கள் இக்கிராமத்தில் காணப்படும் பல குறைபாடுகளை சுட்டிக்காட்டிருந்தார்கள். நான் கல்குடாவுக்கு கூடுதலாக வருகின்ற நோக்கம் இங்குள்ள மக்களின் குறைபாடுகளை இனங்கண்டு முதலமைச்சரினூடாக நிறைவேற்றிக் கொடுக்க வேண்டுமென்ற எண்ணத்திலாகும். அவ்விடயத்தில் எனக்கு முதலமைச்சர் அவர்கள் பூரண ஆதரவும் தருகின்றார் என தெரிவித்தார்.

மேலும் உரையில் எந்தவொறு அபிவிருத்தி விடயத்தினையும் நான் முன்கொண்டு செல்லுகின்றபோது எனக்கு பூரண ஆதரவு தந்து அவ்விடயத்தினை நிறைவேற்றிக்கொடுக்க வேண்டுமென்ற எண்ணத்தில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒருவர். முதலமைச்சர் அவர்கள் இவ்வாறான கிராமங்களுக்கு வராவிட்டாலும் நாங்கள் அவருடைய பிரதிநிதியாக இவ்வாறான கிராமங்களுக்கு விஜயங்களை மேற்கொண்டு அங்கு காணப்படுகின்ற மக்கள் பிரச்சினைகளை இனங்கண்டு சொல்லுகின்றபோது அவற்றை நிறைவேற்றிக்கொடுக்கும் விடயத்தில் பூரண ஒத்துழைப்பு வழங்கும் ஒரு முதமைச்சர் எங்களுடைய முதலமைச்சர்.
நான் ஒரு விடயத்தினை சொல்ல வேண்டும் எங்களுடைய காரமுனை பள்ளிவாயலின் செயலாளர் அவர்கள் இக்கிராமத்தில் காணப்படும் மக்கள் குறைநிறைகளை சுட்டிக்காட்டும்போது மிகவும் தெளிவாக சொன்னார்கள் இக்கிராமத்தில் காணப்படும் மக்கள் போக்குவரத்திற்கான பாதை சம்மந்தமான விடயத்தினை நாங்கள் கௌரவ முதலமைச்சரிடம் சொன்னபோது வாகரை பிரதேச சபைக்குரிய எல்லைக்குள் வரக்கூடிய வகையில் இரண்டரை கிலோமீட்டர் தூரம் ஐ ரோட் திட்டத்தின்கீழ் இக்கிராமத்தின் வீதி உள்வாங்கப்பட வேண்டுமென்று விடாப்பிடியாக இருந்து அபிவிருத்தி செய்வதற்காக எங்களுக்கு ஆவணை செய்துள்ளார்கள்.

நாங்கள் இக்கல்குடா பிரதேசத்திலுள்ள கிராமங்கள் தோறும் வருகின்ற நோக்கம் மக்கள் பிரச்சினைகளை இணங்கண்டு எங்களுடைய முதலமைச்சரினூடாக குறிப்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினூடாக எமக்கிருக்கின்ற அரசியல் அதிகாரங்களை பயன்படுத்தி எங்களுடைய காலத்திற்குள் மக்களுக்கு தேவையான விடயங்களை செய்துகொடுக்க வேண்டுமென்ற விடயத்தில்த்தான் முண்கொண்டு செல்லுகின்றோம்.

உண்மையில் எங்களுக்கு தேர்தல் காலம் இன்னும் ஒரு வருடத்திற்கு மேல் இருக்கின்றது. உண்மையில் அரசியல்வாதிகள் மக்களுக்கு சேவை செய்கின்ற காலம் தேர்தல்கள் நெருங்குகின்ற காலகட்டத்திலாகும். ஆனால் நாங்கள் எங்களுக்கு இறைவன் கொடுத்த அந்த அதிகாரத்தை அந்த அமாணிதனத்தினை சரியான முறையில் மக்களுக்கு செயற்படுத்த வேண்டுமென்ற எண்ணத்தில்த்தானே தவிர இன்னொரு தடவை தேர்தலை எதிர் கொள்ள வேண்டுமென்ற எண்ணத்திற்காக அல்ல.

நான் முதன்முதலில் இக்கிராமத்திற்கு வருகின்றபோது எங்களுடைய காரமுனை பள்ளிவாயலின் செயலாளர் அவர்கள் தெளிவாக சொன்னார்கள் இக்கிராமத்தில் 22 குடும்பங்கள்தான் இருக்கின்றது. மிஞ்சிப்போனால் 22 ஓட்டுக்கள்தான் கிடைக்குமென்று கிட்டத்தட்ட இக்கிராமத்திற்கு மூன்று தடவைகளுக்கு மேல் வந்துள்ளேன். வாக்குகளுக்காக வேலை செய்வதாக இருந்தால் அடிக்கடி இக்கிராமத்திற்கு வரவேண்டிய அவசியம் எனக்கில்லை. வாக்குகளுக்காகத்தான் வருகின்றோம் என்றால் கூடுதலாக மக்கள் வாழுகின்ற பிரதேசங்களுக்கு சென்றால் அங்கு வாக்குகளை பெற்றுக்கொள்ளலாம்.

நீங்கள் எங்களுக்கு வாக்களிப்பதால்த்தான் எங்களுக்கு அரசியல் அதிகாரங்களை அல்லாஹ் தருகின்றான் என்றால் அல்குர்ஆன் வசனம் பொய்யாகிவிடும் ”நாடியவர்களுக்கு ஆட்சி அதிகாரங்களை நாங்களே கொடுக்கின்றோம். அவர்களிடத்திலிருந்து ஆட்சி அதிகாரங்களை சரியான முறையில் பயன்படுத்தவில்லை என்றால் நாங்களே பறித்தும் எடுக்கின்றோம்.” என்று அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகின்றான். குர்ஆனை நம்புகின்ற நாங்கள் இந்த வாக்குகளில் எந்தவிதமான நம்பிக்கையும் எனக்கு கிடையாது.

மட்டக்களப்பு மாவட்டமே எமக்கு வாக்களித்தாலும் அல்லது வாக்களிக்காமல் விட்டாலும் அல்லாஹ் நாடினால் மாத்திரமே நாங்கள் மாகாண சபைக்கோ அல்லது பாராளுமன்றத்திற்கோ செல்ல முடியும். ஆகவே நாங்கள் அரசியல் காலங்களில் மாத்திரம் சேவை செய்யக்கூடிய அரசியல் கூட்டங்களாக நாங்கள் இருக்கக்கூடாதென்று மிகவும் தெளிவாக இருக்கின்றோம். எதிர்காலத்தில் இன்ஷாஅல்லாஹ் எங்களால் முடிந்த அனைத்து விதமான அபிவிருத்தி பணிகளையும் இக்கிராமத்திற்கு பெற்றுத்தருவோம் என கூறி தனதுரையை முடித்துக்கொண்டார்.unnamed
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் 2016.03.30, 2016.05.05 மற்றும் 2016.07.18ஆம் திகதிகளில் காரமுனை கிராமத்திற்கு விஜயங்களை மேற்கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். அத்தோடு, இக்கிராமத்தின்மீது அதிக கரிசனையோடு தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டு பல அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டு வருவதோடு, கிழக்கு மாகாண முதலமைச்சர் பொறியியலாளர் நஸீர் அஹமட் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் ஆகியோருக்கு இக்கிராமத்து மக்கள் மற்றும் பள்ளிவாயல் நிருவாக சபை உறுப்பினர்கள் ஆகியோர் நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர். மேலும் இக்கிராம மக்களுக்கு முதலமைச்சரினால் சிறு அன்பளிப்பு பொருட்களும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் பொறியியலாளர் கௌரவ. Z.A. நஸீர் அஹமட், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் M. ஷிப்லி பாறுக், மட்டக்களப்புபிரிவு மாகாண பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் ஏந்திரி. M. வடிவேல், கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபை செயலாளர் S. இந்திரகுமார், கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை செயலாளர் J. சர்வேஸ்வரன், அரசாங்க தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் இணைப்பாளர் H.M. ஹனீபா, கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் K.B.S. ஹமீட், மட்டக்களப்பு பிரிவு மாகாண பிரதி நீர்ப்பாசன அலுவலகத்தில் கடமையாற்றும் ஏந்திரி. A.S.M. இர்ஷாத், செங்கலடிப் பிரிவு மாகாண பொறியியலாளர் அலுவலகத்தில் கடமையாற்றும் காரமுனை ஆனைசுட்டகட்டு குளத்திற்கு பொறுப்பான தொழிநுட்ப உத்தியோகத்தர் V. மதிகேசன், காரமுனை முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாயல் தலைவர் K.L.M. அஸனார், செயலாளர் S. நளீம், ஏனைய நிருவாக சபை உறுப்பினர்கள் காரமுனை கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் ஏனைய கிராமங்களின் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.unnamed (1)

Related posts

ஆவேசம்” என்ன? #ராஜபக்ச அரசின் கொடூர ராணுவ முகம் வெளிப்படுகிறதா?

wpengine

மன்னார் வவுனியாவில் சுகாதார சேவைகள் சாரதிகள் சுகவீன விடுப்பு போராட்டம்

wpengine

அமெரிக்காவில் எரிசக்தி தேவை அதிகரித்துள்ளமையே எரிபொருளின் விலை உயர்வுக்கு காரணம்!

Editor