பிரதான செய்திகள்

தேர்தல் இல்லாட்டி இராஜினமா

தேர்தல் நடத்தப்படாவிட்டால் தமது பதவியை இராஜினாமா செய்யப் போவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 2018ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்படாவிட்டால் தாம் பதவியை இராஜினாமா செய்ய உள்ளதாக தேர்தல் ஆணையாளர் கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எப்போது நடத்த முடியும் என்பதனை உறுதியாக குறிப்பிட முடியாது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டத்தில் சில பாரிய குறைபாடுகள் காணப்படுகின்றன.
இந்தக் குறைபாடுகளை திருத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானதாகும்.
ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் என்னை திட்டுகின்றார்கள்.

தேர்தல் நடத்தப்படாமையினால் ஏற்படக்கூடிய பாதக விளைவுகளை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளோம் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Related posts

சமுர்த்தி திட்டம் திறமையான திணைக்களமாக மாற்றப்படும்- ஜனாதிபதி

wpengine

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்! ரவூப் ஹக்கீமுக்கு அழைப்பு

wpengine

உயர் கல்வியின்றி ஒரு இலட்சம் மாணவர்கள் நிர்க்கதி!

Editor